பேரன்களுக்கு எம்.பி., பதவி தேவகவுடா கனவுதள்ளாடும் வயதிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள, மதச்சார்பற்ற ஜனதாதள தேசிய தலைவர், தேவகவுடா, 85, செயல்பாடு, மற்ற கட்சி தலைவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த, 1996ல், 17 எம்.பி.,க்களை மட்டுமே வைத்திருந்த அவர், நாட்டின் பிரதமரானார். அவரது மகன் குமாரசாமி, 37 எம்.எல்.ஏ.,க்களுடன், கர்நாடக முதல்வராகி உள்ளார்.

அப்போது முழுமையாக, ஐந்தாண்டுகளை நிறைவு செய்யாத அவர், இப்போது மீண்டும் முழு ரவுண்டு அடிக்கும் கனவில் மிதக்கிறார். இந்த பழுத்த வயதிலும், அவர் செய்யும் பிரசாரத்தை கேட்க, தனி பட்டாளமே காத்திருக்கிறது. ஹாசன், மாண்டியா, ஷிவமொகா என, நாளுக்கொரு தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.கட்சி பிரமுகர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். வெற்றியோ, தோல்வியோ தேவ கவுடா பிரசாரத்துக்கு வர வேண்டுமென அக்கட்சி தலைவர்கள் நினைக்கின்றனர்.தள்ளாடும் வயதிலும் தேவகவுடா பிரசாரம் செய்வதற்கு, யோகா தான் காரணம். தினமும் காலை, 6:00 மணி முதல், 7:30 மணி வரை யோகாசனங்கள் செய்து, உடலை கட்டு கோப்பாக வைத்துள்ளார்.அரசியல் தந்திரங்களை யோசிக்க தியானம் செய்து, மனதையும் கட்டுக்குள் வைத்துள்ளதாக, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வெற்றி வாய்ப்புள்ள இரண்டு தொகுதிகளில், தன் இரண்டு பேரன்களை களமிறக்கியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பேரன்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடமும் பிடித்து விடுவார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)