சென்னை, கமல் தன் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில்
போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை, நேற்று வெளியிட்டார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை துவக்கி உள்ளன. மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை சென்னையில் நேற்று வெளியிட்டார்.24ல் கோவையில்...வேட்பாளர் அறிவிப்பிற்கு பின், கமல் கூறியதாவது:
நமக்கான அரசியல், நமக்கான கட்சி என்ற நோக்கத்துடன், நமக்கான ஆட்சி அமைய வேண்டி, லோக்சபா தேர்தலுக்கு முதல் கட்டமாக 21 வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டு உள்ளனர். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கோவையில் வரும் 24ம் தேதி வெளியிடப்படும்.
அதில் நான் தேர்தலில் போட்டியிடுகிறேனா என்ற விபரமும் தெரிவிக்கப்படும். தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதிகளை விட அவற்றை நிறைவேற்றுவது தான் முக்கியம். அதை எங்கள் கட்சி செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளர்கள் பயோ டேட்டா
திருநெல்வேலி
பெயர் : மா.வென்னிமாலை, 53
படிப்பு : பி.இ.,எம்.பி.ஏ.,
தொழில் : சென்னையில் சாப்ட்வேர்
நிறுவனம்,
ஊர் : துாத்துக்குடி, தந்தை
மாணிக்கவாசகம், கல்லுாரி
பேராசிரியர் தற்போது
இருப்பது சென்னையில்
குடும்பம் : மனைவி சொந்தமாக வணிகம்
மேற்கொள்கிறார். இரண்டு மகன்கள்
ஒருவர் இன்ஜினியர், மற்றவர் மருத்துவர்
அரசியல் அனுபவம்:
ஆம் ஆத்மி கட்சியில் பொறுப்பில்
இருந்துள்ளார். இதற்கு முன்பு தேர்தலில்
போட்டியிட்டதில்லை.
கன்னியாகுமரி
பெயர் : ஜே. எபிநேசர், 33
படிப்பு : டிப்ளமோ
தொழில் : வியாபாரம்
குடும்பம் : மனைவி, 3 மகள், ஒரு மகன்
அரசியல் அனுபவம்: சமூக சேவை, 2015 சென்னை வெள்ளப்பெருக்கில் உதவி, மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு. என்தேசம், என் உரிமை என்ற
கட்சியை தொடங்கியது.
திண்டுக்கல்
பெயர் : எஸ்.சுதாகரன், 52
படிப்பு : எம்.பி.பி.எஸ்., எம்.டி.,
தொழில் : மருத்துவர்
குடும்பம் : பெற்றோர் டாக்டர். மனைவி சித்ரா, ஒரு மகள் (இன்ஜினியர்), ஒரு மகன் (மருத்துவம் படிக்கிறார்)
அரசியல் அனுபவம்: கட்சி சார்ந்த அரசியல் அனுபவம் எதுவும் இல்லை. சமூக ஆர்வலர்.
தேனி
பெயர் : சே.ராதாகிருஷ்ணன், 50
கல்வி : எம்.பில்., எல்.எல்.பி.,
குடும்பம் : மனைவி சுதா ஆசிரியை,
மகள் பிரியங்கா,
மகன் திலீபன்
தொழில் : வழக்கறிஞர்
அரசியல் அனுபவம்:
2000ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக
உள்ளார். 30 ஆண்டாக கமல் நற்பணி இயக்க தேனி மாவட்ட வழக்கறிஞர் அணித்தலைவராக உள்ளார். வழக்கறிஞர் அணியின் மாநில பொதுக்குழு உறுப்பினர், தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகக்குழு
உறுப்பினராக கடந்த 12 ஆண்டாக உள்ளார்.
துாத்துக்குடி
பெயர் : டி.பி.எஸ்.பொன்குமரன், 59
படிப்பு : எம்.காம்.,
தொழில் : அவரி இலை வியாபாரம்
உள்ளிட்ட வணிகங்கள்
ஊர் : பூர்வீகம், ராமநாதபுரம்
மாவட்டம் கமுதி பேரையூர்.
பெற்றோரின் தொழிலுக்காக
பல ஆண்டுகளாக துாத்துக்குடி
அரசியல் அனுபவம்:
இவரது தாத்தாக்கள் விளாத்திகுளத்திலும்,
துாத்துக்குடியிலும் எம்.எல்.ஏ.,க்களாக
இருந்துள்ளனர். இதுவரை கட்சி எதிலும்
இருந்ததில்லை. தேர்தலிலும்
போட்டியிட்டதில்லை.
திருவள்ளூர் (தனி) எம்.லோகரங்கன்
வட சென்னை ஏ.ஜி.மவுரியா
மத்திய சென்னை கமீலா நாசர்
ஸ்ரீபெரும்புதுார் எம்.சிவகுமார்
அரக்கோணம் என்.ராஜேந்திரன்
வேலுார் ஆர்.சுரேஷ்
கிருஷ்ணகிரி எஸ்.ஸ்ரீகாருண்யா
தர்மபுரி டி.ராஜசேகர்
விழுப்புரம் (தனி) அன்பின் பொய்யாமொழி
சேலம் எம்.பிரபு மணிகண்டன்
நீலகிரி ராஜேந்திரன்
திண்டுக்கல் எஸ்.சுதாகரன்
திருச்சி வி.ஆனந்தராஜா
சிதம்பரம் டி.ரவி
மயிலாடுதுறை எம்.ரிபாயுதீன்
நாகை கே.குருவைய்யா
தேனி எஸ்.ராதாகிருஷ்ணன்
துாத்துக்குடி டி.பி.எஸ்.பொன்குமரன்
திருநெல்வேலி எம்.வெண்ணிமலை
கன்னியாகுமரி ஜே.எபினேசர்
புதுச்சேரி எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன்
வாசகர் கருத்து