அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை

அலங்காநல்லுார், தேனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக தனது மகன் ரவீந்திரநாத்தை நிறுத்தியுள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், ''அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்று எந்த சட்டத்திலும் கூறவில்லை,'' என்றார்.தேனி எம்.பி., தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் வலையப்பட்டிக்கு நேற்று சென்று பாரம்பரிய வழக்கப்படி அங்குள்ள மஞ்சமலை, அய்யனார் கோயில்களில் பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் வழிபட்டு பிரசாரத்தை துவக்கினர்.இதற்காக அலங்காநல்லுார் பகுதிக்கு வந்த இருவருக்கும் குமாரம், கேட்டுகடை, பாலமேடு, சத்திரவெள்ளாளபட்டியினர் அ.தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறியதாவது: 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க., ஆட்சிதான் தமிழகத்தில் நீடிக்கும். கட்சியில் உட்கட்சி பூசல், கருத்து வேறுபாடு கிடையாது. தினகரனின் கட்சியால் அ.தி.மு.க,வின் வாக்கு வங்கி பாதிக்காது. அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்று எந்த சட்டத்திலும் கூறவில்லை. தகுதியின் அடிப்படையில் மக்கள் ஏற்றுகொண்டால் அவரவர் போட்டியிட உரிமை உள்ளது. ராஜ கண்ணப்பனுக்கு அடிக்கடி கட்சி மாறுவது கைவந்த கலை. அதனால் அவர் அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் என கூறுவது ஏற்புடையதல்ல, என்றார்.அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)