ஒரே நாடு; ஒரே தேர்தல்: அதிமுக பங்கேற்கவில்லை

புதுடில்லி ; பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், 'ஒரே நாடு ; ஒரே தேர்தல்' குறித்த அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பா.ஜ.,வின் முக்கி ய கூட்டணியான அதிமுக மற்றும் சிவசேனா பங்கேற்கவில்லை.

வளர்ச்சிப் பணிகள் ;இந்தியாவில் மாநிலங்களில் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அப்படி நடந்தால் தான் வளர்ச்சிப் பணிகளை செய்ய நேரம் கிடைக்கும், செலவு குறையும் என்பன போன்ற காரணங்களுக்காக பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதில் உறுதியாக உள்ளார்.

8 கட்சிகள் புறக்கணிப்புஅதற்காக, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பிரதிநிதித்துவம் கொண்ட நாடு முழுவதிலும் செயல்படும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட 8 முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.

முதல்வர்கள் பங்கேற்புஆனால், இடதுசாரிகள் மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ்குமார், ஒடிசா முதல்வர் பிஜூபட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூட்டத்திற்காக டில்லி சென்றபோதும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தொடரும்...இந்த கூட்டம் அனைத்து கட்சிகளின் கருத்தை அறியும் முதல் கூட்டம் தான் என்றும், இன்னும் விரிவான ஆலோசனைக்கு பிறகு அனைத்து கட்சிகளின் கருத்தொற்றுமைக்கு பின்னரே, இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.

எதிர்ப்பு ஏன்?ஆனால், ஓட்டு மிஷின்களில் தவறுகள் நடப்பதாலும், ஒரே நேரத்தில் மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதை எதிர்த்தும், பழைய முறையான வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று கேட்டும் தான் 8 கட்சிகள் ஆலோசனையை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.


J.Isaac - bangalore,இந்தியா
19-ஜூன்-2019 20:48 Report Abuse
J.Isaac ஒரே நாடு ஒரே தேர்தல் ஆனால் தேர்தல் இரண்டு மாதம் நடக்கும். அப்புறம் ஒரே மொழி, ஒரே மதம். நம் நாட்டில் தேர்தல் ஒரு நாடகம். திறமையாக வசனம் பேசி நடிக்கிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள். முதலில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து ஊழல் பண்ணுவது ஒழிக்கப்பட வேண்டும் . தவறுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். பிஹாரில் குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் மேல் பழி போட்டதுபோல் அடுத்தவர்கள் மீது பழி போட்டுகொண்டு காலத்தை ஓட்டக்கூடாது.
சீனு, கூடுவாஞ்சேரி திமுக போன்ற ஆர்ப்பாட்டம் செய்யும் கட்சி எப்படி இந்த நாட்டு நன்மைக்காக நடத்தப்படும் கூட்டத்தில் பங்கேற்கும். தான் ஆண்டபோது இருந்த நீர் நிலைகளை ஆட்டைய போட்டுவிட்டு இப்போது இயற்கை மழையை பொழியாத சமயத்தில் இவ்வாறு தண்ணீர் கேட்டு மறியல் செய்யும் கட்சிகளிடம் எந்தவிதமான ஒத்துழைப்பையும் எதிர்பார்க்க முடியாது.
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜூன்-2019 20:04 Report Abuse
Natarajan Ramanathan எக்காரணம் கொண்டும் மீண்டும் பேப்பர் வாக்கு சீட்டு முறை மட்டும் கொண்டுவரவே கூடாது.
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜூன்-2019 19:03 Report Abuse
Natarajan Ramanathan நாடாளுமன்றம் & சட்டமன்றம் ஆயுளை நான்கு ஆண்டுகளாக குறைக்கவேண்டும். 2019ல் நாடாளுமன்றம் என்றால் 2021ல் எல்லா மாநில சட்ட மன்றங்களுக்கும் தேர்தல் என்று இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தினால் நல்லது. அதேபோல ஒரே நபர் இரண்டுமுறைக்கு மேல் முதல்வர் அல்லது பிரதமர் பதவி வகிப்பது தடை செய்யப்பட வேண்டும்.
Achchu - Chennai,இந்தியா
19-ஜூன்-2019 18:57 Report Abuse
Achchu இனி "அனைத்துக் கட்சி"ன்னு சொல்ல வேண்டியிருக்காது
K.P SARATHI - chennai,இந்தியா
19-ஜூன்-2019 18:37 Report Abuse
K.P  SARATHI ஒரே நேரத்தில் இரு தேர்தல் நடந்தால் அது மக்களுக்கு பாதகமாகும். காரணம் மத்தியில் அரசு சரி இல்லையென்றால் இரண்டு வருடம் கழித்து மாநில தேர்தலில் பாடம் புகட்டமுடியும் . அல்லது மாநிலத்தில் அரசை பிடிக்கவில்லை என்றால் பாராளுமன்றம் தேர்தலில் தண்டனை வழங்கமுடியும்.
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
19-ஜூன்-2019 18:35 Report Abuse
Ab Cd பழைய முறையான வாக்கு சீட்டு முறைக்கு மாறமுடியாதுன்னு சொல்லும்போது எதற்கு தேர்தல் நடத்திக்கிட்டு அந்த செலவையும் மிச்ச படுத்தலாம்
suresh kumar - Salmiyah,குவைத்
19-ஜூன்-2019 18:05 Report Abuse
suresh kumar இண்டெக்ஸில் அதிமுக பங்கேற்கவில்லைன்னு போட்டு, தலைப்பில் ஆலோசனை துவங்கியதுன்னு போட்டு, உள்ளே அதிமுக பத்தி ஒரு வரிகூட இல்லை? சரிதான் அதிமுக பங்கேற்று என்ன சொல்லிவிடப்போகிறது? மேலே இருப்பவன் பார்த்து எது செய்தாலும் சரின்னுதான் சொல்லும். அதுக்கு பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. பேப்பர் அனுப்புங்க, பெருக்கல் குறியிட்ட இடத்தில் கையெழுத்து போட்டு அனுப்பிடுறோம்.
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-ஜூன்-2019 17:17 Report Abuse
தாண்டவக்கோன் கவுரவமா தோக்கவேண்டிய கச்சிய படு கேவலமா தோக்கடிச்சதே அந்த பாஜக வோட கூட்ட அணி வெச்சிக்கிட்டதுதான். ஹ்ம்ம்ம்....
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
19-ஜூன்-2019 16:35 Report Abuse
Apposthalan samlin காங்கிரஸ் தான் evm கொண்டு வந்தது கொண்டு வருவதற்கு முன்னேரே யோசித்து இருக்க வேண்டும் .
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)