பிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு

புதுடில்லி : 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய மசோதாவை நிறைவேற்ற இன்று அனைத்து கட்சி கூட்டத்தை மோடி கூட்டுகிறார். இதனை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில், இடதுசாரிகள் பங்கேற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புறக்கணிப்பு :இன்று நடைபெற உள்ள கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்துஆனால், தேசியவாத காங்கிரஸ், மா.கம்யூ., இ.கம்யூ., போன்ற கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர்க்கட்சிகளிடையே இந்த மசோதா குறித்த ஒருமித்த கருத்து எட்டமுடியாத தால் தான் இன்று நடைபெற இருந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் எதிர்ப்பு?ஆனால், கூட்டத்தில் பங்கேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவே மா.கம்யூ., பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், இ.கம்யூ., பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும் பங்கேற்க உள்ளதாக டில்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஒருமித்த கருத்து இல்லைஇது இந்த விஷயத்தில் பொதுக்கருத்தை எட்டவேண்டும் என்கிற பிரதமர் மோடியின் நல்ல எண்ணத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், லோக்சபாவில் பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான பலம் உள்ளது. ராஜ்யசபாவில் கூட முயன்றால் பெரும்பான்மை பெரும் நிலையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

ராஜ்யசபா பலம்?545 பேர் கொண்ட லோக்சபாவில், தேசிய ஜனநாய கூட்டணி 354இடங்களையும், ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 254 இடங்களில் பா.ஜ., கூட்டணி 104 இடங்களையும் தற்போது வைத்துள்ளது. விரைவில், பல ராஜ்யசபா இடங்கள் காலியாகும் நிலையில் இன்னும் சில மாதங்களில் ராஜ்யசபாவிலும் பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.


suresh kumar - Salmiyah,குவைத்
20-ஜூன்-2019 09:37 Report Abuse
suresh kumar என்ன செய்ய? பெட்ரோல் விலை கூட்ட நினைத்தாலோ அல்லது ஜன் தன் கணக்கில் காசு போட நினைத்தாலோ, ஏதோ ஒன்று இரண்டு மாநிலத்தில் தேர்தல் அதனால் நினைத்தவுடன் செய்ய முடிவதில்லை. இந்த அக்கப்போரை ஒழிக்கத்தான் ஒரே தேசம் ஒரே தேர்தல் கொண்டுவர முயற்சி.
sankaseshan - mumbai,இந்தியா
19-ஜூன்-2019 17:37 Report Abuse
sankaseshan இந்த கொசு தொல்லை தாங்க முடியலே நாராயன
Ramaswami Sampath - mumbai,இந்தியா
19-ஜூன்-2019 17:26 Report Abuse
Ramaswami Sampath ஒரு முறை வோட்டு மெஷினில் மோசடி செய்தல் போதும்
KSK - Coimbatore,இந்தியா
19-ஜூன்-2019 18:53Report Abuse
KSKஆம், இப்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் செய்தது மாதிரி, .....?...
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூன்-2019 17:14 Report Abuse
Endrum Indian நாளை மோடி சொல்லப்போகிறார் "சூரியன் கிழக்கில் உதிக்கின்றது"என்று அதுக்கும் இந்த சுடலை முதல் சொறிவால் வரை ஏதோ ஒன்று சொல்லி உளறிக்கொட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் "தீர்வு" காண வழியில்லாதவர்கள்/வழி தெரியாதவர்கள் , வெறும் பிரச்சினை எதை எடுத்தாலும் அதை ஊத்தி/ஊதி பெரிதாகவேண்டும் இதே இவர்கள் வாழ்வின் குறிக்கோள். பண விரயம் , நேர விரயம் , அதிக அதிகாரிகள் பங்கேற்பு இவை அனைத்தையும் தவிர்க்கத்தான் இந்த விஷயம் "ஒரே தேர்தல், ஒரே தேசம், ஒரே நாள்" இது கூட அறியாத தற்குறிகளை இந்த எம் .பி க்கள் . வேணும்னே குறை கூற வேண்டும், பி .ஜெ. பி எதை கொண்டு வந்தாலும், என்று இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் இந்த கயமை பொருந்திய அரசியல்வாதிகள்.
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜூன்-2019 16:52 Report Abuse
Natarajan Ramanathan நேற்று MP பதவி ஏற்ற ஏதோ ஒரு தீயமுக அல்லக்கை டமில் வால்க டமில் வால்க டமில் வால்க என்று மூன்றுமுறை கூவியது டிவியில் கேட்கவே நாராசமாக இருந்தது.
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-2019 16:26 Report Abuse
uthappa ஆமாம், கம்மிகள் காணாமல் போய் கொண்டிருப்பவர்கள் , அவர்களை ஏன் ஒரு கட்சியாக மதிக்க வேண்டும். நாட்டில் உள்ள தொழிற்கூடங்களை எல்லாம் மூடும் கூட்டம் அது.
GMM - KA,இந்தியா
19-ஜூன்-2019 16:21 Report Abuse
GMM ஒரே நாடு. ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் போது, தேர்தல் நேரம், செலவு குறையும். ஸ்டாலின், மாயா, மம்தா, காங்கிரஸ்... காரணம் புரியாமல் பிஜேபி திட்டம் என்பதால் எதிர்ப்பு இருக்கும். வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் ஆகலாம். மாணவர்களிடம் பள்ளி ஒழுங்குமுறை வகுப்பது போல், ECI எந்த பயனுள்ள கட்டுப்பாடும் செலுத்துவது இல்லை. ஒரு மாநில, தேசிய கட்சி அனைத்து தொகுதியில் போட்டியிட வேண்டும் .33 சதம் வாக்கு பெற வேண்டும் . அல்லது 33 சதம் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இல்லாவிடில், தேர்தல் செலவு வரி விலக்கு பெற்ற கட்சி நிதியில் இருந்து ECI தானாக எடுத்து கொள்ள வேண்டும். ராஜினாமா செய்யும் போது தேர்தல் செலவு ஈடு செய்ய வேண்டும். ECI, SCI வில் ஒரு பக்க உத்தரவு போட்டு காங்கிரஸ் ஊழலுக்கு மத்தியில் பொன் விழா கண்டது. பிஜேபியால் சீர் செய்ய முடியும்.
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஜூன்-2019 15:55 Report Abuse
இந்தியன் kumar எதனை நல்லது செய்தாலும் குறை சொல்லுபவர்கள் குறை சொல்லி கொண்டுதான் இருப்பார்கள் நல்லதை செய்து கொண்டு பொய் கொணடே இருக்க வேண்டும்.
Asagh busagh - Munich,ஜெர்மனி
19-ஜூன்-2019 15:32 Report Abuse
Asagh busagh நல்லதா, உருப்படியான செலவை குறைக்கும் விசயத்த பேச கூப்பிட்டா சொடலைக்கு பிடிக்காது. ஏன்னா நாட்டுக்கு நல்லது நடந்துட்டா தன் குடும்பத்துக்கு வேலை இல்லாம போயிடும்ல. வரலைனா தேர்தல்ல கிடைச்ச வோட்டுல 5 சதவிகிதம் தள்ளுபடி ஆகிடும் சொன்னா வேட்டிய மடிச்சு கட்டி முதல் ஆளா வந்து நிற்பார். ஓட்டை வைச்சு ஆட்டைய போடுறதுக்குகாகவே புழப்பை நடத்துபவர்.
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஜூன்-2019 14:59 Report Abuse
ஆரூர் ரங் சூடான பஜ்ஜி டீ காபியை கம்மிகள் விட்டுக்கொடுக்கமாட்டாங்க ஆனா திமுக ஏற்கனவே தின்னு கொழுத்தவங்க
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
19-ஜூன்-2019 16:27Report Abuse
வல்வில் ஓரி ஹா ஹா...கம்மியா கொக்கா..?...ஹா ஹா.....
மேலும் 11 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)