வயநாட்டில் வாக்காளர்களுக்கு ராகுல் நன்றி

வயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு வாகனத்தில் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் நன்றி தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில் உ.பி.,யின் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியில் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 3 நாள் பயணமாக கேரளா வந்துள்ளார். கோழிக்கோடு விமான நிலையத்தில், ராகுலை, காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.


முதல்கட்டமாக தான் வெற்றி பெற்ற வயநாடு தொகுதிக்கு சென்ற ராகுல், வாகனம் மூலம் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ராகுலுடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றனர்.

மோடி மீது தாக்குஅப்போது ராகுல் பேசுகையில், வெறுப்புணர்வை, அன்பு மற்றும் பாசம் ஆகியவை மூலமே எதிர்க்க முடியும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். புரிந்து கொண்டுள்ளது. எதிர்க்கட்சிக்கான இடம், பலவீனமான மக்கள், பிரதமர் மோடியின் கொள்கைகள் மற்றும் மோடியின் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களுக்காக காங்கிரஸ் போராடும்.
நீங்கள் எந்த கட்சியிலிருந்து வந்துள்ளீர்கள் என்பது பற்றி பிரச்னையில்லை. ஆனால், நீங்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள். வயநாட்டில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் எனது வீட்டு கதவு திறந்திருக்கும். கேரளாவிலிருந்து தேர்வான எம்.பி., என்பதால், வயநாடு மக்களின் பிரச்னை மட்டுமல்லாமல், மாநில மக்களின் பிரச்னையை லோக்சபாவில் எழுப்புவது எனது கடமை. இவ்வாறு ராகுல் பேசினார்.

3 நாள் பயணத்தில் ராகுல், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)