விருத்தாசலம் தொகுதியில், கேப்டன் மனைவி பிரேமலதா போட்டியிடுகிறார். ஏற்கனவே கேப்டன் ஜெயித்த இந்த தொகுதியை, தே.மு.தி.க.,வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என, நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார். ஒரு நிர்வாகி கையை உயர்த்தினார். 'என்ன' என்று பிரேமலதா கேட்டதும், 'மேடம், விருத்தாசலத்தை நம் கோட்டையாக மாற்ற கைவசம், ஒரு, 'பிளான்' இருக்கிறது' என கூறினார்.
'தொகுதியில், 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 703 வாக்காளர்கள் உள்ளனர். அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் ஆளுக்கு, ஆயிரம், ரெண்டாயிரம் கொடுப்பார்கள். ஆனால், அத்தனை பேருக்கும் கிடைக்காது. நிச்சயமாக ஓட்டு போடுவார் என அவர்கள் நம்பும் ஆட்களுக்கு மட்டும்தான் பணம் கொடுப்பார்கள். அது, 40 சதவீதம் தாண்டாது.
'நாம் அப்படி பாகுபாடு பார்க்காமல், அனைத்து வாக்காளர்களுக்கும் தலைக்கு, 300 ரூபாய் கொடுத்தால் போதும். சத்தியம் செய்ய சொல்லி கேட்கக் கூடாது. அப்படி கொடுத்தால், ஏழரை கோடிதான் செலவாகும். நீங்கள், 70 முதல், 80 ஆயிரம் ஓட்டு வாங்கி நிச்சயம் ஜெயிக்கலாம்' என்று நிர்வாகி சொன்னாராம். 'ஓப்பனாக' இப்படி சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்துப் போனார் பிரேமலதா. எதுவும் பதில் சொல்லாமல் கிளம்பி விட்டாராம்.ஏழோ, எட்டோ சொல்லி இருக்கலாமே, நண்பா... ஏழரை கணக்கே தான் வேணுமா?
வாசகர் கருத்து