எதிர்க்கட்சி அந்தஸ்து கேட்க மாட்டோம் : காங்

புதுடில்லி : போதிய உறுப்பினர் எண்ணிக்கையை பெறும் வரை எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்க போவதில்லை என காங்., அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற உடனேயே பணிகளை துவக்கி விட்டது. மறுபுறம் காங்., கட்சி, லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சியின் பார்லி., குழு கூடி தலைவராக சோனியாவை தேர்வு செய்துள்ளது. அத்துடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை தங்கள் கட்சி கேட்க போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. காங்., பார்லி.,குழு தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டுள்ளது இது 4வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு 54 உறுப்பினர்கள் தேவை. பா.ஜ., 303 உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஆனால் காங்., இடம் 52 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, எங்களிடம் 2 உறுப்பினர்கள் குறைவாக உள்ளதால் நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்க போவதில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான 54 உறுப்பினர்களாக எங்களின் பலத்தை அதிகரித்து கொள்ளும் வரை நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்க மாட்டோம். இந்த பொறுப்பை நாங்கள் அரசிடமே தருகிறோம். எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பதா வேண்டாமா என்ற முடிவை அரசே எடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)