மோடி நிறைவேற்றிய முதல் வாக்குறுதி 'ஜல சக்தி'

புதுடில்லி: பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி, அவர் பதவியேற்றதும் 'ஜல சக்தி' எனும் நீர்வளத்துறையை உருவாக்கி, மந்திரியை நியமித்துள்ளார்.

ஜல் சக்தி :பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது, குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காக 'ஜல சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக தனி துறை உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி மோடி மந்திரி சபை நேற்று பொறுப்பேற்றபோது, ஜல சக்தி துறை உருவாக்கப்பட்டது.

கஜேந்திர சிங் செகாவத் :அந்த துறையின் மந்திரியாக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் இணை மந்திரியாக இருந்தவர். தற்போது கேபினட் மந்திரியாக உயர்ந்துள்ளார்.மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையை மறுசீரமைத்து இந்த புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையும் இந்த துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


B.s. Pillai - MUMBAI,இந்தியா
06-ஜூன்-2019 14:35 Report Abuse
B.s. Pillai Let us all hope that Mr.Modi will act impartially and make available water judiciously to each and every State. The proposed plan must take into account the need for drinking water to each and every village and for agriculture. We also should cooperate by saving water wherever and however possible. If we harvest rain water and pluck leaks in the water taps and use minimum water for hand washing etc we will be doing great service to our future generation. Teach our children to use water as much little as only necessary.
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஜூன்-2019 13:36 Report Abuse
இந்தியன் kumar இந்த ஐந்தாண்டுகளில் நீர் மேலாண்மை பெருக்கப்படும் இதை தமிழக மக்கள் விரைவில் உணர்வார்கள்
pazhaniappan - chennai,இந்தியா
31-மே-2019 19:36 Report Abuse
pazhaniappan கடந்த தேர்தலில் ஆறுகளை இணைப்போம் என்றார் , ரஜினிபோன்று பலபேர் தாமாக முன்வந்து பல கோடிகளை அளித்தனர் , இந்த தேர்தலில் , தேர்தல் அறிக்கையில் கூட அது இல்லை , போகட்டும் இலக்காவாவது ஏதாவது செய்யும் என்று நம்புவோம்
31-மே-2019 19:36 Report Abuse
Chandran தமிழனுக்கு தண்ணி காட்டுங்க மோடிஜீ
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
01-ஜூன்-2019 14:35Report Abuse
ஆ.தவமணி,   ஆமா.. ஆமா.. இதுதான் ரொம்ப முக்கியம்... '' தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடாதே '' அப்டீனு சொன்னாலாவது.. இன்னும் 4 , 5 சீட் களில் கர்னாடகா மக்கள் பி.ஜெ.பி. ஐ அதிகமாக ஜெயிக்க வைப்பார்கள்.. கண்ணிருந்தும் குருடனாக, கண்ணை திறந்துகிட்டே கிணற்றில் போய் விழும் தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு என்ன செஞ்சு என்ன புண்ணியம்.....
Somiah M - chennai,இந்தியா
31-மே-2019 19:29 Report Abuse
Somiah M மிகமிக அவசியமான துறை மாத்திரமல்ல மிக மிக அவசரமான துறையும் கூட .செயல்பாடும் அப்படியே இருக்க வேண்டும் .
31-மே-2019 18:57 Report Abuse
ஆப்பு ஒண்ணுமில்லாமலே வாயால 15 லட்சம் வடை சுட்டவர்....இப்போ தண்ணியில்லாமலே ஜலசக்தி....என்ன? நூறே நாள்ள வந்துருமா?
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
31-மே-2019 19:39Report Abuse
Vasuஉன்ன மாதிரி புரியாம வாய்ல வடை சுடறவங்களுக்கு எதுவும் புரியாது. யாரு சொன்ன 15 லட்சம் குடுக்கறாங்கன்னு? தண்ணி இல்லத்துக்கு காரணம் உன்ன மாதிரி அறிவிலிகள் தான். திமுகவுக்கு ஒட்டு போடு அப்பறம் எல்லா குளம் கால்வாய் எல்லாத்தையும் ஆக்கிரமிப்பு பண்ணுங்க. அடுக்கு அப்புறம் மோடி தான் மழை வராததும் காரணம் அப்படின்னு பிரச்சாரம் பண்ணுங்க. இது எல்லாம் தமிழ்நாட்டோட தலை எழுத்து....
தேவராயன் - காரணோடை,இந்தியா
31-மே-2019 20:36Report Abuse
தேவராயன்//...நூறே நாள்ள வந்துருமா?// ஆங்.. அப்புடித்தான். அப்புடித்தான் மேலயே பாத்துக்கிட்டிருங்க. வந்து வாயிலேயே விழும் அந்த பதினைஞ்சி லட்சம். உழைக்காம காசு வரும்னு நெனைக்கற டாஸ்மாக் தேச மக்களுக்கு இன்னும் புத்தி வராததுல ஆச்சர்யமே இல்லை. முதல்ல, அவரு அப்புடி சொன்ன பேச்சோட விடியோவை போட சொல்லி எல்லா வலைமனையிலயும் கடந்த அஞ்சி வருஷமா நிறைய பேர் கேட்டாச்சி. இதுவரை யாரும் அந்த மாதிரி ஒரு பதிவை போடலை. அவரு இருமுனா தும்முனா விமர்சனம் செய்யறவங்க இந்த வீடியோ பதிவை அனுப்ப முடியலைன்னா என்ன அர்த்தம்? அவர் அப்புடி சொல்லவே இல்லைன்னுதானே அர்த்தம்? அவரு சொன்னதோடு அர்த்தம் என்னன்னா 'வெளிநாட்டுல பதுக்கி வெச்சிருக்கற கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வந்தா, இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் வரை பிரிச்சிக்குடுக்கற அளவுக்கு இருக்கும் அந்தப் பணம் இருக்கும்'னு. இதெல்லாம் கொஞ்சமாவது நமக்கு ஹிந்தி தெரிஞ்சிருந்தா புரியும் நாமதான் 'ஹிந்தி படிச்சா வேலை கிடைக்கும்னா, அப்புறம் ஏன் நார்த் இந்தியால இருந்து இங்க வேலை செய்ய வர்றான்?'ன்னு புத்திசாலித்தனமா() யோசிக்கற ஆளுங்களாச்சே. ஆனா, நம்மை ஹிந்தி படிக்கவேணாம்னு சொன்னவங்க எல்லாரும் எந்த மொழியில வடஇந்தியர்கள் கிட்ட பேசுறாங்கன்னு மட்டும் கேட்டுறக்கூடாது. அதைப் பத்தி யோசனையும் செய்யக்கூடாது. (வடஇந்தியன் இங்க வந்து நேர்மையா உழைக்கறதை கேவலமாய் பேசுற நாம, இதே தமிழன் ஒட்டகம் மேய்க்க ஏன் துபாய் போறான்னு கேக்க வக்கில்லை நமக்கு). இதை எல்லாம் யோசிக்கற அளவுக்கு நமக்கு சக்தி இருந்திருந்தாத்தான் நாம ஓட்டுப்போடுறதுக்கு முன்னாடியே யோசிச்சிருப்போமே....
Ganesh G - Hyderabad,இந்தியா
31-மே-2019 20:38Report Abuse
Ganesh Gதென் இந்தியாவில் மட்டும் மோடி ஜெயிக்கவில்லை. அது ஏன் இப்ப தான் புரியுது. 15 லட்சம் மேட்டர் மோடி சொன்னதை ஹிந்தி தெரியாத அறிவாளிகள் தப்பாக புரிந்து கொண்டு ஓட்டு போடவில்லை. உண்மையாகவே மோடி அப்படி சொல்லி இருந்தால் வட இந்தியாவிலும் மற்ற மாநிலங்களிலும் மோடி ஜெயிக்க வாய்ப்பில்லை....
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
01-ஜூன்-2019 12:27Report Abuse
Chowkidar NandaIndiaஇதைவிட இன்னமும் கேவலமாக கேள்வி கேட்டால் கூட டாஸ்மாக் டுமிழனுக்கு உரைக்காது. சேருமிடம் அப்படி....
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஜூன்-2019 13:34Report Abuse
இந்தியன் kumarதமிழர்களிடம் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வோட்டு வாங்கிவிட்டனர் இந்த நிலை அடுத்த தேர்தலில் நேர் எதிராக மாறும்....
Rameeparithi - Bangalore,இந்தியா
31-மே-2019 18:50 Report Abuse
Rameeparithi "நீரின்றி அமையாது இவ்வுலகம் "- அய்யனின் வாக்கை உணாந்து செயல்பட ஒரு பிள்ளையார் சுழி போட்ட மோடிஜி வாழ்க ஜைஹிந்த்
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மே-2019 18:37 Report Abuse
J.V. Iyer மோடிஜி சொன்னா சொன்னது தான். வழவழா.. கொழகொழா.. அல்ல.
KSK - Coimbatore,இந்தியா
31-மே-2019 19:47Report Abuse
KSKமோடி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தலைவர் அல்லவே எனவே இவரை நம்பினோர் கெடுவதில்லை என்பதில் வியப்பில்லை....
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-மே-2019 18:32 Report Abuse
தமிழ்வேல் பாராட்டுக்கள். நல்ல திட்டம். நதிகளை இணைப்பதையும், தேசிய மயமாக்குதலையும் இதில்சேர்க்க வேண்டும்.
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
31-மே-2019 18:07 Report Abuse
tamilan டாஸ்மாக் துறையை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்
மேலும் 12 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)