நிர்மலா சீதாராமன் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது.
59 வயதாகும் நிர்மலா சீதாராமன், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் படித்தவர். முந்தைய மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு துறையை கவனித்து வந்தார்.
2003 ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்த இவர், 2016 ல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, தொழில் மற்றும் வர்த்தக துறை இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.அருண் ஜெட்லிக்கு பிறகு நிதித்துறை பியூஷ் கோயலுக்கு வழங்கப்படும் எனவும், அமித்ஷாவிற்கும் வழங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறையில் அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றின் விபரம் :
* பொருளாதார உயர்வு - 2018 ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, இறுதி காலாண்டில் 6.5 சதவீதமானது. இது 2019 ம் நிதியாண்டில் 7 சதவீதமாகும் என கணக்கிடப்பட்டிருந்தது.
* நிதித்துறை சிக்கல்கள் - வாராக்கடன் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிதித்துறைக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது.
* வேலைவாய்ப்பை உருவாக்குதல் - உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8.1 மில்லியன் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
* தனியார் முதலீடுகளை பெறுதல் - 2015 ம் நிதியாண்டில் 30.1 சதவீதமாக இருந்த ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) 2019 ம் நிதியாண்டில் 28.9 சதவீதமாக சரிந்துள்ளது.
* ஏற்றுமதி பலவீனங்கள் - கச்சா எண்ணெய் விலையால் இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பது போன்ற பிரச்னைகளால் ஜிடிபி விகிதமும் குறைந்து வருகிறது.
* குறைந்த உற்பத்தி, விலை குறைவு - வேளாண்மை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளில் உற்பத்தி குறைவு காரணமாக அவற்றின் மதிப்பும் குறைந்து வருகிறது.
* நிதி பற்றாக்குறை - நலத்திட்டங்களுக்காக அதிக தொகை செலவிடப்படுகிறது. நிதி சமநிலையற்ற தன்மையை சரி செய்ய அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
* ஜிஎஸ்டி, எண்ணெய்-எரிவாயு மற்றும் நிலக்கரி, தொலைத்தொடர்பு, புதிய உற்பத்தி திட்டங்கள், சாலைகள்- நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை, தொழிலாளர் துறை, திறன் மேம்பாடு, காப்பரேட் விவகாரங்கள், கிராமப்புற மேம்பாடு, ரயில்வே, வங்கி மற்றும் நிதி, சந்தைகள், வேளாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் ஆகியன நிர்மலா சீதாராமன் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)