பாஜ அரசுடன் ஒத்துழைப்பு: காங்., அறிவிப்பு

புதுடில்லி : நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவோம் என காங்., தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை டில்லியில் நேற்று பதவியேற்றது. இவ்விழாவில் காங்., தலைவர் ராகுல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்., தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் என ஏறக்குறைய 8000 விஐபி.,க்கள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.பதவியேற்பு விழா முடிந்த சிறிது நேரத்தில் காங்.,ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி மற்றும் அவரது புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் உங்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என பதிவிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பும், தேர்தல் பிரசாரத்தின் போது மோடியையும், அவரது அரசையும் கடுமையாக விசாரித்து வந்த காங்., தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், இணைந்து பணியாற்றுவோம் என சமாதானப் போக்கை கடைபிடித்துள்ளது தேசிய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மே-2019 18:34 Report Abuse
J.V. Iyer வேற வழி இவ்வளவு கேவலமாக ஒரு பிரதவமரை இப்படி திட்டி நான் பார்த்ததில்லை. அவமதிப்பு சட்டத்தில் கைப்புள்ள பாப்புவை காலம் முழுவதும் சிறையில் வைக்க வாய்ப்பு இருக்கிறது.
31-மே-2019 17:14 Report Abuse
S B. RAVICHANDRAN என்ன சொன்னாலும் ஜெயில் உறுதி பப்பு
Cheran Perumal - Radhapuram,இந்தியா
31-மே-2019 16:29 Report Abuse
Cheran Perumal மோடியை திட்டினால் மக்கள் அவரை அதிகமாக ஆதரிக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது.எனவே ஆதரவு நாடகம் போடவேண்டியதுதான்.
Endrum Indian - Kolkata,இந்தியா
31-மே-2019 16:28 Report Abuse
Endrum Indian நச்சுப்பாம்பு எவ்வளவு தான் அழகாக இருந்தாலும் அது நச்சுப்பாம்பு தான் இது காங்கிரசுக்கு மிக மிக பொருத்தமாக பொருந்தும் எல்லா தீய விஷயங்களுக்காகவும்.
சீனு, கூடுவாஞ்சேரி சூதும் வாதும் வேதனை செய்யும். பாஜக வை அழிப்பதற்கு சூழ்ச்சிகள் பல செய்து ரபேல் ஊழல், ராணுவ நடவடிக்கை நாடகம் என்று வெறும் விதண்டாவாதம் செய்ததன் பலன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு விட்டத்தை பார்த்துக்கொண்டு புலம்ப வேண்டியது தான். நிறையவே திருந்த வேண்டும்.
southindian - chennai,இந்தியா
31-மே-2019 16:12 Report Abuse
southindian காங்கிரஸ் ஐ, பி ஜே பி உடன் இணைத்து விட்டால் எல்லா கேஸும் முடிவுக்கு வந்து விடும் அப்பறம் தி மு க விற்கு ஆப்பு தான்
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
31-மே-2019 16:02 Report Abuse
Poongavoor Raghupathy How can Congress co-operate with NDA . Congress has lost its credibility and now can not be an opposition Party also and seems to patch up their relationships because many Corruption charges are haunting their senior Leaders. Chidamabaram who said that Modi can never become PM has become very silent, Chidambaram has blackmailed Rahul for getting an election ticket to his son, It is a shock to know Chidambaram such a senior Leader in Congress blackmailing Rahul with his readiness to go out of Congress if his son was not given a ticket for election, Can any one blackmail Modi in BJP like this, This speaks about Rahul's leadership. Merrily Congress Leaders looted public money and now ready to co-operate with Modi who was ridiculed as a thief.
Ambika. K - bangalore,இந்தியா
31-மே-2019 15:11 Report Abuse
Ambika. K //நன்றாக கவனிக்கவும் நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமே ஒத்துழைப்பு. திருட்டுத்தனத்திற்கு அல்ல.// நீங்களும் ஒன்றை கவனிக்கவும். ஆட்சிக்கு வந்துள்ளது BJP ,காங்கிரஸ் அல்ல வளர்ச்சி ஒன்றே இருக்கும்
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
31-மே-2019 14:48 Report Abuse
 N.Purushothaman இதில் இரண்டு காரணங்கள் உள்ளன ..ஒன்று மறைமுக காரணம் ...இன்னொன்று நேரடி காரணம்... மறைமுக காரணத்தை பொறுத்தவரை நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்போம்ன்னு சொல்வது மூலம் நாங்கள் அரசிடம் மொத போக்கு இல்லாமல் இருப்போம் ...அதே போல் அரசும் எங்கள் குடும்பத்தின் மீதுள்ள வழக்குகளில் தீவிரம் காட்டாமல் இருக்க வேண்டும் என்பது ...நேரடி காரணம் இனியும் அரசிற்கு ஒத்துழைப்பு நல்கவில்லையெனில் மக்களிடம் இருக்கிற செல்வாக்கும் செல்லாக்காசாகிவிடும் என்பதால் வேறு வழியில்லை ....
Sathya Dhara - chennai,இந்தியா
31-மே-2019 16:08Report Abuse
Sathya Dhara இந்த கான் கிராஸ் குற்றவாளிகள் எந்த வேஷம் போட்டாலும்.....எவ்வாறு நாடகம் ஆடினாலும்......கொள்ளை குற்றங்களில் இருந்து தப்பவே முடியாது...... நமோ...நரேந்திர மோதி.....நசுக்கி விடுவார் உங்கள் நாடகத்தை....
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
31-மே-2019 14:42 Report Abuse
வல்வில் ஓரி தி மு க மட்டும் பிஜேபி கூட சேர்ந்தா போதும்..நான் விஜய டி ராஜேந்தர் கட்சியில சேர்ந்திருவென்
மேலும் 20 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)