அமைச்சரவையில் எந்த மாநிலத்துக்கு அதிகம்

புதுடில்லி: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அதிகபட்சமாக உ.பி.,யில் இருந்து 9 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.

உ.பி.,யில் அதிகம்:பிரதமர் மோடியின் அமைச்சவையில், உத்தர பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 9 பேர் இடம் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிராவிலிருந்து 8 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. ம.பி., மற்றும் பீஹாரிலிருந்து தலா 5 பேரும், கர்நாடகாவிலிருந்து 4 பேரும், குஜராத், ஹரியானா, ராஜஸ்தானிலிருந்து தலா 3 பேரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து தலா 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

மேலும் அருணாச்சல், அசாம், சத்தீஸ்கர், டில்லி, கோவா, ஹிமாச்சல், காஷ்மீர், தெலுங்கானா, உத்தரகண்டிலிருந்து தலா ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

தமிழகம், ஆந்திராவுக்கு இடமில்லை:தமிழகம், ஆந்திரா, சிக்கிம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)