கர்நாடக அரசு எந்த நேரத்திலும் கவிழும்: பா.ஜ., தகவல்

பெங்களூரு : லோக்சபா தேர்தலுக்கு பிறகு ஸ்திரதன்மையற்று இருக்கும் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழும் என பா.ஜ., பொது செயலாளரும் கர்நாடகா பா.ஜ., பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.


தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு முரளிதர் ராவ் அளித்த பேட்டியில், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வும் மோடியும் பெற்ற பிரம்மாண்ட வெற்றியில் ஆச்சரியப்படவோ, எதிர்பார்க்காததோ இல்லை. ஆரம்பம் முதலே கட்சி தலைவர்கள் செய்த பிரசாரம், மக்களை நேரடியாக சந்தித்து பெற்ற கருத்துக்களின் அடிப்படையிலேயே முழு நம்பிக்கையுடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தனி பெரும்பான்மை பெறுவோம் என கூறி வந்தனர். இது தவிர மற்ற தலைவர்களும் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ளாமல், மோடியின் வெற்றிக்காக பாடுபட்டனர். குற்றம்சாட்டப்பட்ட எதிர்க்கட்சியினரை விட மோடி தன்னிகர் இல்லாத தலைவர் என மக்களும் நம்பிக்கை வைத்திருந்தனர்.

ராகுல், மம்தா, மாயாவதி, சந்திரசேகர ராவ் போன்றோரிடம் நாடு சென்றால் மோசமாகி விடும் என ஒப்பிட்டு பார்த்து தான் மக்கள் மோடியின் பக்கம் நின்றுள்ளனர். கர்நாடகாவில் ஆளும் கூட்டணி மக்களின் நம்பிக்கையை பெற தவறி விட்டது. அவர்களின் கூட்டணிக்குள் ஒற்றுமையில்லாமல் இருந்தது தான் கர்நாடகாவில் நாங்கள் இந்த அளவிற்கு வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளது. இந்த கூட்டணி பல பகுதிகளில் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாததே மக்களின் நம்பிக்கையை அவர்கள் இழந்ததற்கு காரணம்.


இந்த கட்சிகளில் இருந்து பலர் பா.ஜ., பக்கம் வந்து, எங்கள் கட்சியை பலப்படுத்தி உள்ளனர். கர்நாடகாவில் எப்போது அரசு கவிழும் என என்னால் சொல்ல முடியாது. ஆனால் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்து வருவதால் எந்த நேரத்திலும் கவிழலாம். அரசு கவிழ்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எதிர்க்கட்சி தான். அவர்களின் நலம்விரும்பி அல்ல. தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் எங்கள் கட்சியை வளர்க்கும் அமைப்புக்கள் இல்லை. அதனாலேயே அந்த மாநிலங்களில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. தென்னிந்தியாவில் எங்கள் கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.


இதற்கிடையில் இத்தனை நாட்களாக கர்நாடகா அரசுக்கு எதிராக கவர்னரை சந்தித்து நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கேட்க உள்ளதாக கூறி வந்த பா.ஜ., தலைவர் எடியூரப்பா, தற்போது சட்டசபையை கலைக்க தேவையில்லை என கூறி பல்டி அடித்துள்ளது பா.ஜ.,விற்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)