அமித்ஷாவுக்கு நிதி: 65 பேர் பதவியேற்பு?

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைவர் அமித்ஷா மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை இறுதி செய்ய 5 மணி கூடிப் பேசியுள்ளனர். இதனால், அமித்ஷா நிதியமைச்சர் ஆவார் என்றும், மேலும் அமைச்சரவை குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

நிதியமைச்சரா ; தலைவரா?நிதியமைச்சராக இருந்த அருண்ஜெட்லி, உடல் நிலையை காரணம் காட்டி, தனக்கு பதவி வேண்டாம் என்று மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே, அந்த பதவி அமித்ஷாவுக்கே வழங்கப்படலாம் என்று, தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், பா.ஜ., நிர்வாகிகள் சிலரோ, அடுத்து விரைவில் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் வரவுள்ளதால் பாஜவின் ஒருபகுதியினர் அமித் ஷா தலைவராக தேர்தல் பணிகளை ஆற்றவே விரும்புகின்றனர். இந்த மாநிலங்களில் 2020ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. டில்லி மற்றும் பீகாரில் 2021ல் நடைபெறவுள்ளதால், இது முக்கியமான தருணம் என்கின்றனர்.

மூத்த அமைச்சர்கள் :அமைச்சரவையில் உள்துறை, நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகிய பதவிகளில் முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, பியூஸ் கோயல் மற்றும் நிர்மலா சீத்தாராமன் போன்ற முக்கிய அமைச்சர்களை மாற்ற வாய்ப்பில்லை.

மே.வங்க முக்கியத்துவம் :அதே நேரத்தில், மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து அதிக அமைச்சரவை பிரதிநிதித்துவம் தரப்படும் என்று தெரிகிறது. ஏனெனில், மே.வங்கத்தில் இந்தமுறை பா.ஜ., மம்தாவுடனான கடும் போட்டியில், 18 தொகுதிகளை வென்றுள்ளது. அடுத்த 2021 ல் அம்மாநில சட்டமன்றத்தை கைப்பற்றும் முனைப்பில் உ்ளளது. எனவே, மே.வங்க எம்பிக்கள் பலர் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
பாஜவின் பீகார் மாநில கூட்டணிக்கட்சியான லோக் ஜன்சக்தி கட்சி. அதன் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் அந்த கட்சியின் முகமாக பார்க்கப்படுகிறது. அவரின் மகனான சிராக் பஸ்வானுக்கு கேபினெட்டில் இடம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

65 அமைச்சர்கள் :நாளை (மே 30) நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில், அவருடன் இணைந்து 65 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் பா.ஜ., வட்டாரங்களில் கூறுகின்றனர்.


Anandan - chennai,இந்தியா
31-மே-2019 06:54 Report Abuse
Anandan அமித்ஷா பையனுக்கு நிதி துறை கொடுக்கலாம். அந்த சின்ன வயதில் ஆயிரக்கணக்கான மடங்கு லாபம் சம்பாதித்த திறமைசாலியாயிற்றே. திறமையை மதிக்கவே மாட்டாங்களா பிஜேபியில், சே.
murali - Chennai,இந்தியா
30-மே-2019 14:43 Report Abuse
murali ஸ்டாலின் மட்டுமா வாங்கினார் கே டி பிரதெரஸ் கூடத்தான் வாங்கினார்கள்
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
29-மே-2019 18:33 Report Abuse
JEYAM தமிழன் JEYAM சொல்லப்போனால் பாஜக ஜெயிக்க பல்வேறு திட்டங்கள் போட்டு மோடியின் பொருளாதார வீழ்ச்சி வெளியில் தெரியாமல் இருக்க ஈயம்பூசி மறைத்து அம்பயர்களை ஆட்டம் முழுதும் தம் பக்கமே வைத்திருந்ததில் வெற்றிபெற்ற அமித்ஸாக்கு நிதிமந்திரி பதவியென்ன? பிரதம மந்திரி பதவியே கொடுக்கலாம்
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
29-மே-2019 20:00Report Abuse
Subramanian SundararamanIMF போன்ற பன்னாட்டு குழுமங்கள் உலகில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா கணிசமான அளவு முன்னேறியிருப்பதாக மதிப்பீடு செய்யும்போது பொருளாதார வீழ்ச்சி மறைக்கப்பட்டிருப்பதாக கூறுவது சரியானதாக இல்லை . அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்லதை பாராட்டவும் தவறை விமர்சனம் செய்யவும் வேண்டும் . அரசியல் சாயம் இல்லாத பார்வை ஆட்சியாளர்களை திருத்தும் ....
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
29-மே-2019 20:26Report Abuse
Bebetoதமிழ் நாடு மக்கள் ஒன்று மூளை இல்லாதவர்கள் (dmk காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திருமா கமல் ஆகியோர் மூளை சலவை செய்து விட்டார்கள்.) இல்லையேல் அதி புத்திசாலிகள் (காசு வாங்கி ஒட்டு போட்டார்கள்) . மொத்தத்தில் தன தலையில் மண் வாரி போட்டு கொண்டுள்ளார்கள். இனி பாருங்கள் வேடிக்கை - கனி, ராசா, கார்த்தி, KD brothers , மற்றும் திமுகள் MP க்கள் ஆகியோர் ரெய்டு ல் மாட்டி, திஹார் செல்ல இருக்கிறார்கள். அப்போதுதான், தமிழ் நாடு உருப்படும்...
Anandan - chennai,இந்தியா
31-மே-2019 06:52Report Abuse
Anandanவேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவைகள் உயர்ந்தால் தான் அது வளர்ச்சி. IMF கடன் வழங்கி அவனுக்கு அடிமையாக்க எதுவும் சொல்லுவார்கள். உள்ளூரில் இருக்கும் நமக்கு தெரியாததை அவன் சொன்னால் நம்புவார்களாம் இந்த அறிவாளிகள்....
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
29-மே-2019 18:30 Report Abuse
JEYAM தமிழன் JEYAM கோஷாலா மந்திரி யாருங்கோ ????
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
30-மே-2019 00:44Report Abuse
Vasuநீங்க எடுத்துக்கங்க, பாவம் ரொம்ப கஷ்டப்படறீங்க கமெண்ட் எழுதி கமெண்ட் எழுதி....
sivan - Palani,இந்தியா
30-மே-2019 01:02Report Abuse
sivan உள்ளே போக வேண்டிய பிராடுகள் உள்ளே போவது மட்டுமல்ல. பொது இணைய தளத்தில் நாட்டை பற்றி ..பிரதமரை பற்றி அவதூறு செய்ப்பவர்களும் தண்டிக்கப் பட வேண்டும்....
Anandan - chennai,இந்தியா
31-மே-2019 06:52Report Abuse
Anandan//கோஷாலா மந்திரி யாருங்கோ ????// அதற்க்கு மழுங்கடிக்கப்பட்ட அடிமைகள் பல உண்டு....
siriyaar - avinashi,இந்தியா
29-மே-2019 18:07 Report Abuse
siriyaar Since tamils said go back modi don't give even a single birth to tamils.
Cheran Perumal - Radhapuram,இந்தியா
29-மே-2019 17:39 Report Abuse
Cheran Perumal அமித்ஷா உள்துறை, ராஜ்நாத் ராணுவம், பியூஸ் கோயல் நிதி, நிர்மலா வெளியுறவு இப்படி இருக்கலாம்.
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
29-மே-2019 17:22 Report Abuse
DSM .S/o PLM நிதி துறை அமித் ஷா விற்கு பொருந்தாது.. உள்துறை அல்லது பாராளுமன்ற விவகாரம் கொடுக்கப்படலாம். அது அவருக்கு பொருத்தமாக இருக்கும். நிதி பியூஸ் கோயல், வெளியுறவு ஸ்மிரிதி, ராணுவம் நிர்மலா என்று துறைகள் ஒதுக்க படலாம்.
இந்தியன் kumar - chennai,இந்தியா
29-மே-2019 17:20 Report Abuse
இந்தியன் kumar இது யூகமான செய்தி நிஜ செய்தி நாளை மாலை தெரியவரும்.
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
29-மே-2019 17:19 Report Abuse
தமிழர்நீதி அடுத்த கொள்ளை கூட்டம் ஆட்டம் ஆரம்பம் . இன்னும் எத்தனை போர் விமானம் வாங்க போறார்களோ .
Sudarsanr - Muscat,ஓமன்
29-மே-2019 19:49Report Abuse
Sudarsanrஎப்படி ஸ்டாலின் வாங்குன மாதிரியா......
Jayvee - chennai,இந்தியா
29-மே-2019 20:43Report Abuse
Jayvee...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)