'தி.மு.க.,விற்கு அழைப்பில்லை!'

சென்னை : ''பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு, தி.மு.க.,வை அழைக்கவில்லை,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர்.பாலு கூறினார்.சென்னை விமான நிலையத்தில், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி.,யான, டி.ஆர்.பாலு அளித்த பேட்டி:மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு, எந்த அழைப்பும், எங்களுக்கு வரவில்லை. அப்படி இருக்கையில், பிரதமர் பதவியேற்பு விழாவில், நானும், ஆ.ராஜாவும் பங்கேற்க போவதாக, வெளிவந்த தகவலில் உண்மையில்லை.

ஜனாதிபதியிடம் இருந்தோ அல்லது பிரதமரிடம் இருந்தோ, இதுவரை, எந்தவொரு அழைப்பும், தி.மு.க.,வுக்கு வரவில்லை. அழைப்பு வந்தால், பங்கேற்பது குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு எடுப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)