மோடி என்ற தனி மனிதனுக்கு வெற்றி

சென்னை, :''லோக்சபா தேர்தல் வெற்றி மோடி என்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி'' என நடிகர் ரஜினி கூறினார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி டில்லி புறப்பட்டார். அப்போது போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டில் அவர் அளித்த பேட்டி:இந்த தேர்தல் வெற்றி மோடி என்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி. ஒரு தலைவரால் தான் அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும்.இந்தியாவில் நேரு,இந்திரா,ராஜிவ்,வாஜ்பாய் வரிசையில் மோடி மக்களை கவர்ந்த தலைவராக உள்ளார்.

தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மக்களை கவர்ந்த தலைவர்களாக இருந்தனர்.தமிழகத்தில் பா.ஜ. தோல்வியுற்றாலும் கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு குறித்த நிதின் கட்கரியின் அறிவிப்பை பாராட்டுகிறேன்.


அரசியல் அலை உருவாகி விட்டால் அதிலிருந்து தப்ப முடியாது. மத்தியில் ஏற்பட்ட அலை வேறு; தமிழகம்,ஆந்திரா,மற்றும் கேரளாவில் ஏற்பட்ட அலை வேறு.தமிழகத்தில் எதிர்கட்சியினர் செய்த சூறாவளி பிரசாரம் மற்றும் நீட், மீத்தேன், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்கள் மோடிக்கு எதிரானஅலையாகி விட்டன.கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் கமல் 4 சதவீத ஓட்டுக்களை பெற்றிருப்பது பாராட்டுக்குஉரியது.

காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் விலகத் தேவையில்லை. அவருக்கு தலைமை பண்பு இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன்.ஆளும் கட்சி போல வலுவான எதிர்கட்சி அவசியம். காங்கிரசில் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களை கையாள்வது ராகுலுக்கு சவாலான விஷயம்.மத்தியில் பதவியேற்க உள்ள பா.ஜ. அரசு தமிழகத்திற்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டில்லி செல்கிறேன்.இவ்வாறு நடிகர் ரஜினி கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)