லாலு மகனுக்கு எதிர்ப்பு

பாட்னா: ராஷ்ட்டிரிய ஜனதாதள தலைவரும் லாலு மகனுமான தேஜஸ்வி பிரதாப்புக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என அவரது கட்சி எம்.எல்.ஏ.,வே குரல் எழுப்பியுள்ளார்.

சமீபத்திய லோக்சபா தேர்தலில் பீகாரில் நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் பிரபலமான லாலு கட்சி படு தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ஆர்ஜேடி கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து தேஜஸ்வி விலக வேண்டும் என அந்த கட்சியின் எம்எல்ஏ., மகேஸ்வர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கட்சியில் வாரிசு அரசியலை பலரும் விரும்பவில்லை. மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளனர். இவருக்கு தலைவர் பதவியை வழங்கலாம். மேலும் தேஜஸ்வி எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலக வேண்டும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)