வதந்திகளை பரப்ப வேண்டாம்: காங்கிரஸ்

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி பற்றி மட்டுமே கட்சி காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட்டதாகவும், தேவையற்ற வதந்திகள், யூகங்களை பரப்ப வேண்டாம் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

வதந்திகள் யூகங்கள் ;



அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா அறிக்கையில் கூறுகையில், ''நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள், அதில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து மட்டுமே டில்லியில் நடந்த காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஊடகங்களில் பல்வேறு யூகங்களும், வதந்திகளும் பரவி வருகின்றன.

மதிப்பளியுங்கள் ;



காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு கட்சியின் அனைத்து மாற்றங்களை செய்யவும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊடகங்களும் மற்றவர்களும் அதற்கு மதிப்பளிக்க முன்வர வேண்டும். காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் நடந்ததாக பரவி வரும் தகவல்கள் துரதிருஷ்ட வசமானது,'' என்றும் சுர்ஜிவாலா விளக்கம் அளித்தார்.

காரியக் கமிட்டி கூட்டத்தில், தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கேட்டது தொடர்பாக, ராகுல் குற்றம்சாட்டியது, பிரியங்கா பேசியதாக வெளிவந்துள்ள தகவல்களில் உண்மையில்லை என்றும் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)