காசி மக்களின் ஆசி: மோடி உருக்கம்

வாரணாசி; காசி மக்களின் ஆசி எப்போதும் தனக்கு உள்ளதாக, பிரதமர் மோடி அங்கு நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உருக்கமுடன் பேசினார்.

புதிய சக்தி :லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, இன்று (மே 27) வாரணாசியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசினார். தனது உரையை ஹர ஹர மகாதேவ் என்று துவங்கிய மோடி, அங்கு பேசுகையில், '' என்னை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களுக்கும் முதலில் நன்றி. வாரணாசி மக்கள் ஒவ்வொருவரும் எனது வெற்றிக்காக போரிட்டார்கள். காசி வந்தாலே நான் புதிய சக்தி பெற்றதாக உணர்கிறேன். என் மனம் அமைதி பெறுகிறது.

காசியின் ஆசி ;எந்த வேட்பாளரும் தேர்தல் முடிவுக்கு முன்னர் மன நிம்மதியுடன் இருக்க மாட்டார்கள். ஆனால், நான் மிகுந்த மன நிம்மதியுடன் கேதார்நாத், பத்ரிநாத் புனிதப்பயணம் சென்றேன். ஆனால், காசி மக்களின் அன்பு எனக்கு வெற்றியை அளித்துள்ளது. அமைதியாக தேர்தல் நடைபெற மக்கள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள்.

முதலில் தொண்டன்:நான் முதலில் பா.ஜ.,வின் தொண்டன் தான். பின்னர் தான் இந்த நாட்டின் பிரதமர். இந்தியாவின் அரசியல் திசையை உத்தரபிரதேச மாநிலம் தீர்மானித்துள்ளது. இந்த நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது. இம்மாநிலத்தின் ஏழை ,எளிய மக்கள் எதிர்காலத்திற்காக தங்களை அர்ப்பணித்துகொண்டார்கள்.

அரசியல் பண்டிதர்கள் :மாபெரும் அரசியல் பண்டிதர்களுக்கு கூட தேர்தலில், கள நிலவரம் தெரியவில்லை. அந்தப் பண்டிதர்களுக்கு ஏழை மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலடி கொடுத்தார்கள். கடந்த 2014 தேர்தல், 2017 உ.பி.தேர்தல், தற்போதைய 2019 தேர்தல்களில், அரசியல் கணக்கீடுகள் வெற்றிபெறவில்லை. மாறாக, மக்களின் உணர்வுகளே வெற்றிபெற்றன.

எதிர்மறை பிரசாரம் :கடந்த 70 ஆண்டுகளாகவே இந்த நாட்டில் தவறான பிரசாரம் தான் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்மறையான பிரசாரத்தையே இதுவரை செய்து வந்துள்ளார்கள். ஆனால், அதனை நாம் வெளிப்படைத்தன்மை, கடின உழைப்பால் முறியடித்தோம். கடின உழைப்பிற்கும் வெளிப்படைத் தன்மைக்கும் ஈடு இணையில்லை.

நமோ நமோ :அரசு கொள்கைகளைத்தான் உருவாக்கும். அமைப்பு தான் போர்த்திட்டங்களை வகுக்கும். அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்வோம்,'' என்று அவர் பேசினார். பா.ஜ., தொண்டர்கள் அவரது உரையின் போது நமோ, நமோ, மோடி, மோடி என்று வாழ்த்து முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர்.

3வது இடம் :
முத்தாய்ப்பாக மோடி பேசுகையில், '' உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை 3 வது இடத்திற்கு எடுத்துச்செல்வது தான் தனது லட்சியம்,'' என்று தொண்டர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையில் தெரிவித்தார்.

அமித்ஷா :
முன்னதாக பேசிய பா.ஜ., தலைவர் அமித்ஷா, ''மோடியின் குஜராத் மணிநகர் தொகுதி தான் இந்த நாட்டிலே வளர்ச்சி பெற்ற தொகுதி. அப்படி வாரணாசியை மோடி மாற்றிக் காட்டுவார். அவரை மக்கள் பிரதிநிதியாகப் பெறும் வாய்ப்பு வாரணாசி மக்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் மோடியின் தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலில் செயல்படுவது குறித்து பெருமைப்படுகிறோம். கடந்த 5 ஆண்டுகள் மோடி வெற்றிகரமான பிரதமர் என்பதை நிரூபித்துள்ளன,'' என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)