காசியில் மோடி சிறப்பு பூஜை

வாரணாசி: உ.பி., மாநிலம் வாரணாசி வந்த பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

2வது முறை பிரதமராக மோடி பதவியேற்கும் முன்னர், தன்னை வெற்றி பெற செய்த வாரணாசி தொகுதி மக்களுக்கு இன்று (27 ம் தேதி ) நன்றி தெரிவிக்க உள்ளார். இதனை முன்னிட்டு அங்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் வாராணாசி வந்தார். அவரை கவர்னர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் பா.ஜ., தலைவர் அமித்ஷா வரவேற்றனர்.

கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி



வாரணாசி வந்த பிரதமர் மோடி முதன் முதலாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்கிறார். பின்னர் திறந்த ஜீப் மூலம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். பிரதமரை வரவேற்க வாரணாசி முழுவதும் வீதியோரங்களில் காவி பலூன்கள் தொங்க விடப்பட்டுள்ளன. மேலும் மோடி கட்அவுட், மலர் அலங்காரம் என வாரணாசியில் தொண்டர்கள் அமர்க்களப்படுத்தி உள்ளனர் .

வாரணாசியில் 2வது முறை போட்டியிட்ட பிரதமர் மோடி 6,74,664 ஓட்டுக்கள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளரை 4 .80லட்சத்திற்கும் மேலான வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த 2014 ஐ விட கூடுதல் வித்தியாசம் ஆகும்.

தியானம், தாயார், கோயில்



லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாள் மோடி கேதார்நாத் சென்று தியானத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் தனது வெற்றியை முதன்முதலாக தாயிடம் தெரிவித்து நேற்று ஆசி பெற்றார். இன்று மோடி முதல் நிகழ்ச்சியாக காசி விஸ்வநாதரை தரிசித்தார். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின்னர் வாரணாசியில் நடந்த பா.ஜ., கட்சி கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார். கூட்டத்தில் தொண்டர்கள் மோடி, மோடி என கோஷங்கள் எழுப்பினர்.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் அவர் தொடர்ந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

மாறு வேடங்களில் கலைஞர்கள்



காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் மெகா டிஜிட்டல் ஸ்கிரீன் வைக்கப்பட்டுள்ளது. வாராணாசியில் பல்வேறு இசைகலைஞர்கள் குவிந்துள்ளனர். மேள தாளங்களுடன் 100 க்கணக்கான கலைஞர்கள் வந்துள்ளனர். ராமர், அனுமான் என பல்வேறு தெய்வங்களின் மாறு வேடங்களில் கலைஞர்கள் மோடியை வரவேற்கவுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)