கவர்ச்சி இல்லாத ராகுல்: சிவசேனா கிண்டல்

புதுடில்லி: தற்போது முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் நாட்டில் எந்த ஒரு நபரையும் ராகுல் பேச்சு கவரவில்லை என சிவசேனா கட்சியின் சாமன்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில்; ராகுல் தலைமையிலான காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உண்டு , ஆனால் அதில் முக்கியமானது ராகுலின் அணுகுமுறை. அவர் பிரசார யுக்தியில் எவ்வித பலனும் கிட்டவில்லை. அவருடைய பேச்சு, செயல்பாடுகள், குறைபாடுகள் எடுத்து வைத்த விவரங்கள் எதுவும் மக்களை கவரவில்லை. இந்த நாட்டில் எந்த ஒரு குடிமகனையாவது ராகுல் பேச்சு 'டச் 'செய்தது என்று சொல்ல முடியுமா ?

பிரியங்காவுக்கும் மவுசு இல்லை




சமீபத்தில் சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பெரும் தோல்வி கிட்டியுள்ளது. உ பி., மாநிலத்தில் பிரியங்கா பொறுப்பு ஏற்றும் பயன் இல்லை. கடந்த 2014 தேர்தலில் காங்கிரசுக்கு 2 இடம் கிடைத்தது. ஆனால் இந்த முறை அதுவும் ஒன்றாக மாறியது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)