மே 30 ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பு

புதுடில்லி : மே 30 ம் தேதி இரவு 7 மணிக்கு 2வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் மே 30 அன்று இரவு 7 மணிக்கு மோடி, பிரதமராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளது. அமைச்சரவை உறுப்பினர்களும் அன்றே பதவியேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இதனையடுத்து புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்டை நாட்டு தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)