அமேதியில் ராகுல் தோல்விக்கு காரணம் என்ன?

அமேதி : கடந்த, 1980ல் இருந்து, காங்., குடும்ப சொத்தாக இருந்த, உத்தர பிரதேசத்தின் அமேதி லோக்சபா தொகுதியில், காங்., தலைவர் ராகுலின் தோல்விக்கு முக்கிய காரணம், கிராமப் பகுதியில் உள்ள மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாததே எனக் கூறப்படுகிறது.
காங்கிரசின் கோட்டைலோக்சபாவுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், உத்தர பிரதேசத்திலுள்ள, அமேதி தொகுதியின் முடிவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தொகுதியில், முன்னாள் பிரதமர் இந்திராவின் இரண்டாவது மகனான, சஞ்சய், 1980ல் வென்றார். அவரைத் தொடர்ந்து, இந்திராவின் மூத்த மகன், ராஜிவ், நான்கு முறை இங்கு வென்றுள்ளார்.அவருடைய மனைவி, சோனியா, 1999ல், இங்கு வென்றார்.ராஜிவ் - சோனியாவின் மகனும், காங்., தலைவருமான, ராகுல், இந்தத் தொகுதியில், தொடர்ந்து, மூன்று முறை வென்றார். காங்கிரசின் கோட்டை என்றழைக்கப்படும் இந்தத் தொகுதியில், தற்போது நடந்த தேர்தலில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 55 ஆயிரத்து,120 ஓட்டுகளில், ராகுலை வென்றார்.கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், ராகுல், 1.07 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ஸ்மிருதி இரானியை வென்றார்.கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும், ஸ்மிருதி இரானி இந்தத் தொகுதிக்கு அடிக்கடி பயணம் செய்து, மக்களை சந்தித்து வந்தார்.அவருடைய கடின உழைப்பே, இந்தத் தேர்தலில், ராகுல் தோல்விக்கு காரணமானது.பிரசார யுக்திஇது குறித்து, அமேதி தொகுதி மக்கள் கூறியதாவது: கடந்த, 1980ல் இருந்து இந்தத் தொகுதி, முன்னாள் பிரதமர் இந்திரா குடும்பத்தாரின் சொத்தாகவே இருந்து வந்துள்ளது.கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, பா.ஜ.,வின் மத்திய அமைச்சராக பணியாற்றிய, ஸ்மிருதி இரானி, இங்கு தீவிரமாக களமிறங்கினார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தினார்; மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். அவருடைய தீவிர பிரசாரம், காங்., கோட்டையை தகர்க்கும் வகையில் அமைந்தது.


தொகுதியின், எம்.பி.,யாக இருந்த ராகுல், அவ்வப்போது இங்கு வருவார். ஆனால், அமேதி தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு, அவர் அதிகம் சென்ற தில்லை. கட்சித் தலைவராவதற்கு முன்பே அப்படிதான் இருந்தார்.அவருக்கு ஆலோசனை வழங்கும் குழுவினர், சரியான பிரசார யுக்தியை வகுத்து தரவில்லை. அதேநேரத்தில், ஸ்மிருதி இரானி, ஒவ்வொரு நடவடிக்கையையும் திட்டமிட்டு செயல்படுத்தினார். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் சென்று, பா.ஜ., அரசின் திட்டங்கள், மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து, அவர் நேரடியாக விளக்கினார்.எடுபடவில்லை

ராகுலின் தங்கை, பிரியங்கா வின் பிரசாரமும்
இங்கு எடுபடவில்லை. அவரும் விமான நிலையத்தில் இறங்கி, நகர்பகுதிகளில் மட்டுமே மக்களை சந்தித்தார். நெடுஞ்சாலையில் காரில் போகும்போது, கையை அசைத்தால், ஓட்டு கிடைத்து விடுமா என்ன.முன்னாள் பிரதமர் ராஜிவ், எம்.பி.,யாக இருந்தபோது, தொகுதி யில் மேற்கொண்ட பணிகள் குறித்து, தற்போதுள்ள இளம் வாக்காளர்களுக்கு தெரியாது. பா.ஜ.,வின் வளர்ச்சித் திட்ட பிரசாரங்கள் அவர்களை ஈர்த்துள்ளது.
அதனால், இளம் வாக்காளர்களின் ஓட்டு, அதிகளவில், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், அமேதி தொகுதிக்குட்பட்ட, ஐந்து சட்டசபை தொகுதிகளில், நான்கில், பா.ஜ., வென்றது. ஒன்றை மட்டுமே காங்., வென்றது.


அதன் பிறகும், இந்த, நான்கு தொகுதிகளில் கட்சியை வளர்ப்பதற்கான முயற்சிகளை, காங்., மேற்கொள்ளவில்லை. மொத்தத்தில், தொகுதி மக்களுடன் அதிக அளவு நேரடி தொடர்பு இல்லாததே, ராகுலின் தோல்விக்கு முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


C.Elumalai - Chennai,இந்தியா
26-மே-2019 18:41 Report Abuse
C.Elumalai ஏபிசிடி, மோடியோ,பிஜேபியோ அவர்களது, கூட்டணி கட்சியோ,எந்த பிரச்சாரபொது கூட்டத்திலாவது,எங்களுக்கு வாக்களித்தால் 15லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கிறோம்,என்ற வாக்குறுதி கொடுத்தார்களா?{அ} பேசினார்களா? இதைமுதலில் சொல் ஏபிசிடி குவைத். பொய்யைபேசி பேசியே மோடிஜி மீது களங்கத்தை உண்டு பண்ணாதே பாய். விஷத்தை தமிழ்மக்கள் மீது வீசி அவர்களையும் விஷமாக்கிவிடாதே பாய். விஷம் உன்னோடுவே,இருக்கட்டும்.
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-மே-2019 14:54 Report Abuse
Natarajan Ramanathan மக்கள் ஓட்டு போடாததுதான் காரணம்.
S.kausalya - Chennai,இந்தியா
26-மே-2019 14:43 Report Abuse
S.kausalya ஸ்டாலின் பேச்சை கேட்டு, நகையை வங்கியில் அடமானம் வைத்து உள்ளேன். 50000 ரூபாய்க்கு தான். அதனை தள்ளுபடி செய்து நகையை திருப்ப முடியுமா? அதான் ஜெயித்து விட்டாரே
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
26-மே-2019 17:46Report Abuse
Ab Cdமுதலில் சொல், ஏற்கெனவே ஜெயித்த மோடி பேச்சை கேட்டு வாங்கிய 15 லட்சம் கடனை என்ன செய்தாய்...
ChandraMouli Sethuraman S - Mumbai,இந்தியா
26-மே-2019 18:54Report Abuse
ChandraMouli Sethuraman S...
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
26-மே-2019 11:38 Report Abuse
வல்வில் ஓரி சிம்பிள் கட்டிப்புடிச்சி கண்ணடித்தான் இல்லையா அதுதான் இவனை எல்லாம் நம்ம பிரதமரா எப்படிடா ஏத்துக்கிறது என்று மக்கள் ஓட்டு போடவில்லை
sridhar - Chennai,இந்தியா
26-மே-2019 09:33 Report Abuse
sridhar ஹிமாலய ஊழல், கண்மூடி மைனாரிட்டி ஆதரவு, திறமை இன்மை, குடும்ப ஆதிக்கம். இவைதான் காரணம். வயநாட்டில் ஜெயித்ததும் மைனாரிட்டி ஆதரவு தான் காரணம். வட மாநிலங்கள் முழித்துக்கொணடன.
ssh - mali,மாலத்தீவு
26-மே-2019 09:27 Report Abuse
ssh Congress defeated because of it become Khan + Cross
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
26-மே-2019 08:42 Report Abuse
Natarajan Attianna திமுக காரனின் புத்தியை கேட்டு தரம் இல்லா பேச்சுக்களினால் காங்கிரஸினுடைய பெயரை கெடுத்து விட்டார் இந்த புத்திசாலி தமிழ் நாட்டிலும் பிஜேபியின் எதிர்ப்பு ஓட்டுகள் அல்லாமல் திமுக மேல் நம்பிக்கையில் மக்கள் ஒட்டு அளிக்கவில்லை. உருப்படாத விசயங்களை மக்கள் மனதில் ஏற்றியும், குடும்பத்திட்க்கு ரூபாய் 6000 கிடைக்கும் என சோம்பேறி தமிழனின் கனவு இன்று ...களின் பக்கம் இல்லாமல் பாவிகளின் பக்கம் சார்ந்துள்ளனர். தமிழக்கு அடர்ந்த இடத்தில எல்லாம் வரவேண்டும், கஷ்டப்படக்கூடாது, காசு கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கவேண்டும், இன்னும் பல....
கைப்புள்ள - nj,இந்தியா
26-மே-2019 08:42 Report Abuse
கைப்புள்ள
கைப்புள்ள - nj,இந்தியா
26-மே-2019 08:20 Report Abuse
கைப்புள்ள
blocked user - blocked,மயோட்
26-மே-2019 08:14 Report Abuse
blocked user 10 ஆண்டுகள் ஆடிய ஆட்டத்துக்கு வின்சி தானே முழுவதுமாக பொறுப்பேற்க முடியாதுதான். என்றாலும் அதே 'ஊழல்' எண்ண ஓட்டம் காங்கிரசை கீழேதான் கொண்டுபோகும் என்பதை இன்னும் உணராமல் இருப்பதுதான் பின்னடைவுக்குக் காரணம். சிதம்பரம் நேரு குடும்ப பெனாமியாக கொள்ளை அடித்தது, சொத்து சேர்த்து ஏராளம். இன்னும் திருந்தாமல் தெனாவெட்டாக பேசித்திரிவது காங்கிரஸ் கட்சியில் மட்டுமே சாத்தியம். சீக்கியர்களையும், இலங்கை தமிழர்களையும் பழிவாங்கியது இரத்த வெறியின் உச்சகட்டம். அது போக மதம் மாற்றுவதில் ஏராளமாக பணம் பார்த்தவர்கள் வின்சி குடும்பத்தவர்கள். இதையெல்லாம் மக்கள் மறக்க அதிக நாள் ஆகும்.
Raghupathy - DELHI,இந்தியா
28-மே-2019 14:57Report Abuse
Raghupathyவெயிட் அண்ட் வாட்ச் வி வில்ல பாசக். டோன்ட் ஓவர் என்ஜோய்.கன்றோல் யுவர் self...
மேலும் 3 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)