புதிய அரசு அமைக்கும் படி மோடிக்கு ஜனாாதிபதி ராம்நாத் அழைப்பு!

புதுடில்லி:பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி, எம்.பி.,க்கள் கூட்டத்தில், பிரதமராக, நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரினார். புதிய அரசு அமைக்கும்படி, ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில், லோக்சபாவுக்கு புதிதாக தேர்வான, எம்.பி.,க்கள் பட்டியலை, ஜனாதிபதியிடம், தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது. வரும், 30ல், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல், ஏப்., 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டங்களாக நடந்தது. கடந்த, 23ல், தேர்தல் முடிவுகள் வெளியாகின. வாக்காளருக்கு பணம் தர முயன்றதால், தமிழகத்தின் வேலுார் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.மீதமுள்ள, 542 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., தனியாக, 303 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, 353 தொகுதிகளிலும் வென்று, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. காங்., 52 தொகுதிகளில் வென்றது.
தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான நிலையில், புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன.

தலைவர்கள் பங்கேற்புஅதன்படி, தே.ஜ., கூட்டணி, எம்.பி.,க்கள் கூட்டம், பார்லிமென்ட் மைய அரங்கில், நேற்று மாலை நடந்தது. இதில், பிரதமராக, நரேந்திர மோடி
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் பதவிக்கு, மோடியின் பெயரை, பா.ஜ., தலைவர், அமித் ஷா முன்மொழிந்தார்.மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அவருடைய பெயரை வழிமொழிந்தனர்.இந்தக் கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளிமனோகர் பங்கேற்றனர்.கூட்டணிக் கட்சித் தலைவர்களான, சிரோன்மணி அகாலிதளத்தின், பிரகாஷ் சிங் பாதல்; பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவர், நிதிஷ் குமார்; சிவசேனா தலைவர், உத்தவ்தாக்கரே; அ.தி.மு.க.,வின் சார்பில் தமிழக முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர், பன்னீர் செல்வம்; லோக் ஜனசக்தி தலைவர், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதைத் தொடர்ந்து, நேற்று இரவு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான

உரிமையை, நரேந்திர மோடி கோரினார்.


முன்னதாக, தே.ஜ., கூட்டணி கட்சித் தலைவர்கள், ராம்நாத் கோவிந்தை சந்தித்து, மோடி தலைமையில் அரசு அமைவதற்கான ஆதரவு அளிக்கும் கடிதத்தை ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து, மத்தியில் ஆட்சி அமைக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முறைப்படி அழைப்பு விடுத்தார், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

வரும், 30ல் பதவியேற்புஅதையடுத்து, வரும், 30ம் தேதி, நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2014ல் பிரதமராக பதவியேற்றபோது, தெற்காசிய நாடுகள் பிராந்திய ஒத்துழைப்புக்கான சங்கம்எனப்படும், 'சார்க்' நாடுகளின் தலைவர்களுக்கு, மோடி

அழைப்புவிடுத்திருந்தார்.தனிப் பெரும்பான்மையுடன், தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளதால், பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

எம்.பி.,க்கள் பட்டியல்லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள, 542 எம்.பி.,க்கள் பட்டியலை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள், அசோக் லாவசா, சுஷில் சந்திரா ஆகியோர், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், இந்தப் பட்டியலை அளித்தனர். அதையடுத்து, புதிய அரசுஅமைப்பதற்கான நடவடிக்கைகளை, ஜனாதிபதி மேற்கொள்ளலாம்.

லோக்சபா கலைப்புபதினேழாவது லோக்சபாவுக்கான தேர்தல் முடிந்து, பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைய உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த,மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 16வது லோக்சபாவை கலைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.அதையேற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையின் ராஜினாமா கடிதங்களை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு அமையும் வரை, காபந்து அரசாக செயல்படும்படி கேட்டுக் கொண்டார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)