ராகுல் ராஜினாமா விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் நாடகம்: தலைவர் பதவியில் தொடருவார் என ஒருமித்த முடிவு

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவ தாகக் கூறி,ராகுல் கடிதம் தந்ததாகக் கூறப் பட்டாலும், 'அதுபோல எதுவும் நடக்க வில்லை' என, காங்.,தலைமை மறுத்தது. இறுதியில், 'ராகுல் ராஜினாமா கடிதம் கொடுத்தார்; ஆனால், அதை ஏற்கவில்லை.அவரே தலைவர் பதவியில் தொடருவார்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில், லோக்சபாவில், 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தனியாக, 303 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, 353 தொகுதிகளிலும் வென்று, பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைகிறது.இந்தத் தேர்தலிலும், மிகவும் மோசமான படுதோல்வியை, காங்கிரஸ் சந்தித்துள்ளது.

படுதோல்விவெறும் 52 இடங்களில் மட்டும், வெற்றி பெற்று உள்ளதால், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியைகூட பெற முடியாத நிலை, அக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.கடந்த தேர்தலில், காங்., 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தொடர்ந்து, இரண்டாவது முறையாக, இது போன்ற படுதோல்வியை, லோக்சபா தேர்தலில் பெற்று உள்ளதால், இது குறித்து ஆராய்வதற் காக, காங்கிரஸ் உயர் மட்டஅமைப்பான, செயற்குழு கூட்டம், நேற்று டில்லியில் கூடியது.


காங்கிரஸ் தலைமை அலுலகத்தில் நடை பெற்ற இக்கூட்டத்தில், ஐ.மு., கூட்டணி தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அந்தோணி, குலாம் நபி ஆசாத் உட்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, நிருபர்களிடம் பேசிய, காங்., தலைவர்
ராகுல், 'தன் ராஜினாமா குறித்து, செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்' என, கூறி இருந்ததால், நேற்றைய கூட்டம் குறித்து, பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.ராகுலின் சகோதரியும், அகில இந்திய பொதுச் செயலர்களில் ஒருவருமான பிரியங்காவும் பங்கேற்ற இக்கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டன.

மூவர் குழுகுறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்காக, அம்மாநில முதல்வர், அம்ரீந்தர் சிங்கிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வ தற்கு, மூத்த தலைவர் அந்தோணி, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர்
அசோக் கெலாட் ஆகியோர் இடம்பெற்ற மூன்று பேர் குழு அமைப்பது என்றும்; அந்தக் குழு, தன் அறிக்கையை, விரைவில் சோனியாவிடம் வழங்குவது என்றும், முடிவெடுக்கப்பட்டது.


அதேபோல, லோக்சபா காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக, யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்தும், ஆலோசிககப்பட்டது.இம்முறை, இளம்,எம்.பி., ஒருவரை, தேர்வு செய்யலாம் என்ற யோசனை முன்வைக்கப்படவே, முன்னாள் மத்தியஅமைச்சர் மணீஷ்திவாரியின் பெயர், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. கூட்டத்தின் இறுதியில், ''தோல்விக்கு பொறுப் பேற்று, தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்,'' எனக் கூறி, அதற்கான கடிதத்தை சோனியா மற்றும் மன்மோகன் சிங்கிடம்,ராகுல் வழங்கினார்.


ஆனால், ராகுலின் இந்த ராஜினாமா முடிவை ஏற்க வேண்டாம் என, பல தலைவர்களும் வலியுறுத்தினர். இதையடுத்து, ராகுல் அளித்த ராஜினாமா கடிதம் மீது, எந்த முடிவும் எடுக்க, யாரும் முன்வரவில்லை.ஆனாலும், தன் பதவியை ராகுல் ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல் ஊடகங்களில் பரவ ஆரம்பித்தவுடன், காங்கிரஸ் தலைமையிடம் இருந்தே, 'அதுபோல எதுவும் நடக்கவில்லை.அந்த செய்தியில் உண்மை இல்லை' என, மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இது குறித்து, தகவலறிந்த வட்டாரங் கள் கூறியதாவது:ராகுல், கடிதம் தந்தது உண்மை தான். ராகுலின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டால், சிக்கல்கள் அதிகரிக்கவே செய்யும்.புதிய தலைவர் யார் என்பதை, தேட வேண்டும்.
நேரு குடும்பத்திற்கு வெளியே என வந்தாலே, பல பிரச்னைகள் உருவாகும்.ஏற்கனவே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அசாம் முன்னாள் முதல்வர்தருண் கோகோய், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரதுபெயர்கள், பரிசீலனையில் உள்ளன.பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் பெயரும் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில்,ராகுலின் ராஜினாமா ஏற்கப்பட வில்லை.அவரே கட்சி தலைவராக தொடரு வார் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.கடந்த, 2017 டிசம்பரில் தான், காங்கிரஸ் தலைவர் பதவியை, தன் தாய், சோனியாவிடம் இருந்து ராகுல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுலுக்கு அதிகாரம்கட்சியின் மூத்த தலைவர்கள், 52 பேர் இடம்பெற்ற, காங்., செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:காரியக் கமிட்டி கூட்டத்தில், தன் உரையின் போது, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலக முன்வருவதாக, ராகுல் கூறினார்.ஆனால், அதை, கூட்டத்தில் இருந்த அனைத்து தலைவர்களும் ஒரே குரலில் எதிர்த்தனர். இக்கட்டான இந்த நேரத்தில்,கட்சியின் தலைமை பொறுப்பில் அவரே தொடர வேண்டும் என, வலியுறுத்தினர்.கட்சியின் கொள்கையை நிலைநாட்டவும்; நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள், சிறுபான்மையினர் நலனுக்காக போராடவும், அவரே கட்சித் தலைமையில் தொடர வேண்டும் என, இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்துகிறோம்.மேலும், அனைத்து நிலைகளிலும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக் கைகள் எடுக்கும் அதிகாரமும், ராகுலுக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


- நமது டில்லி நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)