மாயாவதி கட்சிக்கு 1.61 லட்சம் ஓட்டுகள்

சென்னை லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட பகுஜன்சமாஜ் கட்சி 1.61 லட்சம்ஓட்டுகளை பெற்றுள்ளது.தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு வருகிறது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 97 ஆயிரத்து 823 ஓட்டுகளைப் பெற்றது.அதேபோல் இம்முறை லோக்சபா தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 1.61லட்சம் ஓட்டுகளைப் பெற்றுள்ளது.அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் மட்டும் 15 ஆயிரத்து 187 ஓட்டுகளைப் பெற்றது.மிகக்குறைவாக கன்னியாகுமரி தொகுதியில் 1989 ஓட்டுகளை பெற்றுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)