கைக்கு எட்டிய 'சீட்'கை கழுவிய காங்.,

காங்., செயல் தலைவர் ஒருத்தரு, கட்சி தலைமை, கூட்டணி தலைமையோடு போராடி, எப்படியோ, 'சீட்' வாங்கி, கோவை தெற்கை பிடித்து விட்டார்.அங்கு தேசிய கட்சியான, பா.ஜ., மட்டும் தான்; எப்படியாவது, தி.மு.க., ஆதரவோட, 'ஜெயம்' கிடைக்கும் என, எதிர்பார்த்தார். ஆனால், திடீரென கமல் அங்கு, 'மையம்' கொண்டதால், 'முதலுக்கே மோசமா' என, கதறுகிறார்.ஏற்கனவே, கட்சிக்குள் கோஷ்டிப்பூசல். கமல் புண்ணியத்தில் உங்களுக்கு, மூன்றாம் இடம் தான் என கட்சிக்காரர்களும், 'கை' கழுவிட்டாங்களாம். 'ஜகா' வாங்கவும் முடியாம தவிக்கிறார் தல!

தெற்கும், வடக்கும் 'காம்ரேட்'கள் உரசல்'டாலர் சிட்டி' யின் இந்திய கம்யூ., எம்.பி.,க்கு செல்வாக்கு அதிகம். சூரிய கட்சி தலைவருடன் நேரடி தொடர்பும் இருப்பதால், திருப்பூர் வடக்கு தொகுதியை வாங்கி விட்டார். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினருக்கு கேட்ட தெற்கு கிடைக்கவில்லை. 'நம்மை எம்.பி., கழற்றி விட்டுட்டாரு' என சில, 'காம்ரேட்'கள் அதிருப்தியில் உள்ளனர். அதைக்கேள்விப்பட்ட, எம்.பி., 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...' எனக்கூறி நக்கலாக சிரிக்கிறார்.

'லாஸ்ட் சான்ஸ்...பாத்துக்கோங்க!'திருப்பூர் தெற்கு தொகுதியை, தோழர்களுக்கு ஒதுக்க இருந்த நிலையில், தி.மு.க., 'மாஜி' மேயர் செல்வராஜ், 'பைட்' போட்டு வாங்கிட்டாரு. அவருக்கு கொடுக்க தலைமைக்கு விருப்பம் இல்லையாம். அவர சுத்தி, கட்டப் பஞ்சாயத்து ஆசாமிங்க, போலி, 'பாஸ்போர்ட்' வழக்கில், விவகாரத்தில் சிக்கியவர்... இப்படிப்பட்ட ஆட்கள் தான் இருக்காங்க. அதனால, 'சீட்' மறுத்தாங்க. ரொம்ப மன்றாடினப்ப, 'இதுதான், 'லாஸ்ட் சான்ஸ்' பார்த்துக் கோங்க'ன்னு சொல்லி, 'சீட்' குடுத்துதாம் தலைமை. வெற்றிக்கனி பறிக்கணும்னா மானா வாரியா செலவு செஞ்சாகணும்னு, கட்டி வச்சிருக்கிற பண முடிப்புகளை அவுத்துகிட்டு இருக்காராம்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)