'டிபாசிட்' இழந்த பணக்கார வேட்பாளர்கள்

புதுடில்லி,:லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட, 'டாப் - 10' பணக்கார வேட்பாளர்களில், ஐந்து பேர் தோல்வியை தழுவி உள்ளனர்; மீதி ஐந்து பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.தோல்விலோக்சபா தேர்தலில், 'டாப் - 10' பணக்கார வேட்பாளர்களில், ஆந்திராவில் இருந்து மூவரும், பீஹார் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து, தலா, இருவரும், தமிழகம், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து, தலா, ஒருவரும்போட்டியிட்டனர்.இதில், ஐந்து பேர் மட்டுமே வெற்றி அடைந்துள்ளனர். பீஹாரின் பாடலிபுத்ரா லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர், ரமேஷ் குமார் சர்மா, 1,556 ஓட்டுகள் மட்டுமே பெற்று, 'டிபாசிட்' இழந்தார்.இவர், தன் வேட்பு மனுவில், 1,107 கோடி ரூபாய் சொத்து மதிப்பு காட்டி, பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.வித்தியாசம்இந்த பட்டியலில், இரண்டாம் இடம் பிடித்த, அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன், விஷ்வேஷ்வர், காங்கிரஸ் சார்பில், தெலுங்கானாவின் செவ்வெல்லா தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.மத்திய பிரதேச முதல்வர், கமல்நாத்தின் மகனும், நாட்டின் மூன்றாவது பணக்கார வேட்பாளருமான நகுல்நாத், காங்., சார்பில், ம.பி.,யின் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.நாட்டின் நான்காவது பணக்கார வேட்பாளர், வசந்தகுமார், காங்., சார்பில், கன்னியாகுமரி தொகுதியில், மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு, 2.5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.நாட்டின் ஐந்தாவது பணக்கார வேட்பாளரும், மேற்கு, உ.பி.,யின் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ஜோதிராதித்ய சிந்தியா, குணா தொகுதியில், தோல்வியை தழுவினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)