சொந்த காசில் வைத்த சூனியம் தமிழக பா.ஜ., தோல்விக்கு காரணம்

''சொந்த காசில் சூனியம் வைத்தது போல, மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள், மக்கள் எதிர்க்கும் திட்டங்களாக இருந்ததால், தமிழகத்தில், பா.ஜ., தோல்வி அடைந்தது,'' என, காந்திய மக்கள் இயக்க தலைவர், தமிழருவி மணியன் கூறினார்.தமிழகத்தில், பா.ஜ., தோல்விக்கு, என்ன காரணம் என்ற கேள்விக்கு, தமிழருவி மணியன் அளித்த பதில்:தோல்விக்கு, வேட்பாளர்கள் காரணமல்ல. வேட்பாளர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என, மக்கள் பிரித்து பார்க்கவில்லை. தமிழக மக்களின் மண் சார்ந்த உணர்வுகளை, மக்கள் பிரச்னைகளை, தெள்ளத் தெளிவாக, பா.ஜ., தலைமை தெரிந்து கொள்ளவில்லை.
பழங்குடி மக்கள் முதல், பல்வேறு தரப்பு மக்களுக்கு, மத்திய அரசு கொடுத்த நலத் திட்டங்களை, வெகுஜன மக்களிடம், பா.ஜ., தலைமை எடுத்துச் சொல்லவில்லை.மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களால், மக்களுக்கு கிடைக்கும் பயன்களை, மக்களிடம் தெளிவுப்படுத்தி விளக்கி, அவர்களின் ஆதரவு பெற்று, அத்திட்டத்தை நிறைவேற்ற முன்வந்திருக்க வேண்டும்; ஆனால், பா.ஜ., அரசு, அப்படி செய்யவில்லை.

எரிச்சல்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் வகையில், திட்டங்களை நிறைவேற்ற முயன்றதை, மக்கள் ஏற்கவில்லை.துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 பேர் உயிர் இழந்தனர்.அந்த ஆலையை நடத்தும், வேதாந்தம் குழுமத்திற்கு, கடலுார், நாகப்பட்டினம், காரைக்காலில், எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒப்பந்தம் அளிக்கப்பட்டது; இதையும் மக்கள் ஏற்கவில்லை.
அதேபோல், எட்டு வழிச்சாலை திட்டத்தை, நீதிமன்றமே வேண்டாம் எனக் கூறியுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில், 'அத்திட்டத்தை நிறைவேற்றுவோம்' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்ததும், வாக்காளர்களுக்கு, பா.ஜ., மீது எரிச்சலை ஏற்படுத்தியது.சொந்த காசில் சூனியம் வைத்தது போல, வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், பா.ஜ., அரசு தந்த ஒவ்வொரு திட்டமும், மக்கள் எதிர்க்கும் திட்டமாக இருந்தது தான், பா.ஜ., வேட்பாளர்கள் தோல்விக்கு முக்கிய காரணம்.ஒடிசாவில், புயல் வீசியதில், மிகப்பெரிய சேதம் அடைந்த இடங்களை, பிரதமர் மோடி பார்வையிட்டார்; தேவையான நிதியை ஒதுக்கி கொடுத்தார்.

ஹீரோ
தமிழகத்தில், 'ஒக்கி' புயல் தாக்கிய இடங்களை, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட, பிரதமர் மோடிக்கு நேரமில்லை. ஆனால், தேர்தலுக்கு மட்டும், மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய, அவருக்கு நேரம் இருந்தது.இப்படி, மாற்றாந்தாய் மனப்போக்கில் செயல்பட்டதால் தான் தோல்வி. தேசிய அளவில் வாக்காளர்கள், மோடியை, 'ஹீரோ'வாக பார்த்தனர். ஆனால், தமிழகத்தில், 80 சதவீதம் வாக்காளர்கள், மோடியை வில்லனாகவே கருதினர்.தேவதுாதர்களை, பா.ஜ., வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தாலும், அவர்களும் தோல்வியை தான் தழுவியிருப்பர்.இவ்வாறு, தமிழருவி மணியன் கூறினார்.- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)