தஞ்சையில் 9 முறை போட்டியிட்டு 6 முறை ஜெயித்த பழனிமாணிக்கம்


தஞ்சாவூர்:தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், ஒன்பது முறை போட்டியிட்ட, பழனிமாணிக்கம் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று, ஆறாவது முறையாக, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில், ஒரே தொகுதியில் அதிகம் முறை ஜெயித்தவர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் பழனிமாணிக்கம், 1984ல், முதல்முறையாக போட்டியிட்டார்; அதில் தோல்வி அடைந்தார். பின், 1989, 1991 தேர்தல்களிலும் போட்டியிட்டு, தோல்வியையே தழுவினார்.கடந்த, 1996ல் போட்டியிட்டு, வெற்றி பெற்று, முதல் முறையாக, எம்.பி.,யானார்; 1998, 1999, 2004, 2009ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு, தொடர் வெற்றிகள் பெற்றார். 2004 முதல், 2014ம் ஆண்டு வரை, மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார்.தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்ற இவருக்கு, 2014 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இவருக்கு பதிலாக, டி.ஆர்.பாலு போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். இந்நிலையில், ஒன்பதாவது முறையாக, 2019 தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியில், பழனிமாணிக்கம் களம் இறங்கினார்.இதுவரை, தமிழகத்தில், எந்த முக்கிய கட்சியில் இருந்தும், யாரும் ஒன்பது முறை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில்லை. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அதிக முறை வெற்றி பெற்றவர் என்ற, பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.இதன்படி, பழனிமாணிக்கம், த.மா.கா., வேட்பாளர் நடராஜனை விட, 3 லட்சத்து, 68 ஆயிரத்து, 129 ஓட்டுகள் அதிகம் பெற்று, ஆறாவது முறையாக, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரே தொகுதியில், ஒன்பது முறை போட்டியிட்டு, ஆறு முறை ஜெயித்தவர், தமிழகத்தில் இவர் மட்டுமே.- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)