ராஜஸ்தான், பீஹார் மாநிலங்களில் 'நோட்டா'வுக்கு அதிக ஓட்டு பதிவு

ஜெய்ப்பூர், : லோக்சபா தேர்தலில், பீஹாரில், 8.17 லட்சம் பேரும், ராஜஸ்தானில், 3.27 லட்சம் பேரும், 'நோட்டா'வுக்கு, ஓட்டுப் போட்டுள்ளனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள், தங்கள்ஓட்டை பதிவு செய்வதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 'நோட்டா' என்ற பட்டன் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏழு கட்டமாக நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள்,நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பல மாநிலங்களில், நோட்டா பெற்ற ஓட்டுகள் விபரம்:

பீஹார்
பீஹாரில், மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில், 8.17 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். இது, பதிவான ஓட்டுகளில், 2 சதவீதமாகும்.
டில்லி
டில்லியில், ஏழு லோக்சபா தொகுதிகளிலும், நோட்டாவுக்கு, 45, ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில், நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுகள், 6,200.
ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள, ஆறு தொகுதிகளில், 21 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், நோட்டாவுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

ஹரியானா
ஹரியானாவில் மொத்தம் உள்ள, 10 தொகுதிகளிலும், நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுகள், 41 ஆயிரத்து, 781. இது, மொத்த ஓட்டுப்பதிவில், 0.68 சதவீதமாகும்.

வாரணாசிபிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற, உ.பி., மாநிலம், வாரணாசி தொகுதியில், நோட்டாவுக்கு, 4,037 வாக்காளர்கள் ஓட்டு போட்டு உள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசம்
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, நான்கு தொகுதிகளிலும், 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர், நோட்டாவுக்கு ஓட்டு போட்டுள்ளனர். இது மொத்த ஓட்டு சதவீதத்தில், 0.87 சதவீதமாகும்.

வயநாடு
காங்., தலைவர் ராகுல் வெற்றி பெற்ற, கேரள மாநிலம், வயநாடு தொகுதியில், நோட்டாவுக்கு, 2,155 வாக்காளர்கள் ஓட்டளித்து உள்ளனர்.
பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தில், மொத்தம் உள்ள, 13 தொகுதிகளில், நோட்டாவுக்கு, 1.54 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர், பதிவான ஓட்டுகளில், இது, 1.12 சதவீதம். மேலும், 13 தொகுதிகளிலும், நோட்டா, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், நோட்டாவை விட, குறைந்த சதவீத ஓட்டுகளை தான் பெற்றுள்ளன.
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள, 25 தொகுதிகளில், நோட்டாவுக்கு, 3.27 லட்சம் வாக்காளர்கள், ஓட்டளித்துள்ளனர். மாநிலத்தில், இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை விட, நோட்டா அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது.கடந்த தேர்தலிலும், இங்கே, நோட்டாவுக்கு, 3.27 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)