முதலில் அம்மா... இப்போது மகன்...

புதுடில்லி,: ஹரியானா சட்டசபைக்கு, 2014ல் நடந்த தேர்தலில், பா.ஜ.,வின் பிரேமலதாவிடம், இந்திய தேசிய லோக் தளத்தின், 'மாஜி' தலைவர் துஷ்யந்த் சவுதாலா தோல்வியடைந்தார். இம்முறை, பிரேமலதாவின் மகனிடம் தோல்வியை தழுவி உள்ளார்.ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தள தலைவருமான, ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன், அஜய் சவுதாலா.
இவர், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்திய தேசிய லோக் தளத்தில் இருந்து பிரிந்து, ஜனநாயக ஜனதா என்ற கட்சியை, கடந்த ஆண்டு துவங்கினார்.இவரது மகன், துஷ்யந்த் சவுதாலா. இவர், 2014ல் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில், இந்திய தேசிய லோக் தளம் சார்பில், உச்சான காலன் தொகுதியில் போட்டியிட்டார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட, பா.ஜ., வேட்பாளர் பிரேமலதாவிடம், இவர் தோல்வி அடைந்தார்.இந்நிலையில், 2019 லோக்சபா தேர்தலில், ஜனநாயக ஜனதா கட்சி - ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தது. ஹரியானாவின், ஹிசார் தொகுதியில், ஜனநாயக ஜனதா சார்பில், துஷ்யந்த் சவுதாலா போட்டியிட்டார்.இவரை எதிர்த்து, பிரேமலதாவின் மகன், பிரிஜேந்திர சிங், பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். இவர், துஷ்யந்த் சவுதாலாவை, 3.14 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.முதலில் அம்மாவிடம் தோற்ற துஷ்யந்த் சவுதாலா, இம்முறை அவரது மகனிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)