தே.மு.தி.க., அங்கீகாரம் காலி

லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழகத்தில், தேசிய கட்சிகள் தவிர, அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய, மூன்று கட்சிகள் மட்டுமே, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்றிருந்தன. 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற, தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றி பெற்று, 7.88 சதவீத ஓட்டுகளைப் பெற்றது.அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்த, தே.மு.தி.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், 5.13 சதவீத ஓட்டுகளைப் பெற்றது.அப்போது, அக்கட்சிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் இருந்ததால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் ரத்தாகவில்லை. அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், 2.4 சதவீதமாக குறைந்தது. ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை.தற்போது நடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., நான்கு தொகுதிகளிலும் தோல்வியை தழுவி யது. ஓட்டு சதவீதம், 2.20சதவீதமாக குறைந்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற, இரண்டு எம்.பி.,க்கள் அல்லது 6 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும். இரண்டையும் பெறாததால், தே.மு.தி.க., அங்கீகாரம் ரத்தாகும் என, தெரிய வந்துள்ளது.அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரண்டு எம்.பி.,க்களை பெற்றாலும், ஒருவர், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றதால், அக்கட்சியும் அங்கீகாரம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)