கட்சி தாவியவர்களுக்கு கிடைத்தது தோல்வி

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சி தாவி, வேறு கட்சி சார்பில் போட்டியிட்ட, முக்கிய தலைவர்கள் பலர், தோல்வியை சந்தித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், வி.ஐ.பி.,க்கள் பலருக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஜனதா தளம்பீஹார் மாநிலம், பாட்னா சாஹிப் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, பாலிவுட் முன்னாள்
நடிகர், சத்ருகன் சின்ஹா, மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்திடம் தோல்வி அடைந்தார்.


சத்ருகன் சின்ஹா, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரசில்சேர்ந்தார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, சரத் யாதவ், இந்த தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், பீஹாரில் போட்டி யிட்டு, தோல்வி அடைந்தார்.தேசியவாத காங்கிரசி லிருந்து விலகி, காங்., சார்பில் போட்டியிட்ட, தாரிக் அன்வருக்கும், தோல்வியே பரிசாக கிடைத்தது. போபால் தொகுதி பா.ஜ.,விலிருந்து வெளியேறி, காங்கிரசில் சேர்ந்த, முன்னாள் கிரிக்கெட் வீரர், கீர்த்தி ஆசாத்தும்தோல்வி அடைந்தார்.


இதேபோல், கடைசி நேரத்தில் கட்சி தாவிய, 47 பேர், இந்த தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளனர்.அதே நேரத்தில், தேர்தல் பிரசாரத்தின்
போது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, பெண் சாமியார், பிரக்யா சிங் தாக்குர், மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.இவர், காங்., மூத்த தலைவர், திக்விஜய் சிங்கை தோற்கடித் தார்.மற்றொரு சர்ச்சை வேட்பாளரான, சமாஜ்வாதியின், அசம் கான், உ.பி.,மாநிலம், ராம்பூரில், பா.ஜ., வேட்பாளரும், நடிகையுமான, ஜெயப்ரதாவை வீழ்த்தி, வெற்றி பெற்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)