கர்நாடகாவில் காங்., படுதோல்வி: ஆட்சியை அகற்ற பா.ஜ., தீவிரம்

பெங்களூரு: கர்நாடகா லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் படுதோல்வியை சந்தித்ததால், மாநில அரசியலில், நாளுக்கொரு மாற்றங்கள் நிகழ்ந்து
வருகின்றன.


கர்நாடகாவில், குமார சாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்நிலையில், லோக்சபா தேர்தலில், அக்கட்சியுடன் கூட்டணியை தொடர்வதன் மூலம், அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம் என, காங்., தலைவர், ராகுல் திட்டமிட்டார்.


மீண்டும் முயற்சிஇதன்படி, இந்த தேர்தலில், 21 தொகுதிகளில் காங்கிரசும், ஏழு தொகுதிகளில், ம.ஜ.த.,வும்
போட்டியிட்டன.ஆனால், எதிர்பார்ப்பை மீறி, இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. மாநிலத்தில் மொத்தமுள்ள, 28 தொகுதிகளில், பா.ஜ., 25 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.
காங்., - ம.ஜ.த., கூட்டணி, தலா, ஒரு தொகுதியில் மட்டுமே வென்றன.லோக்சபா தேர்தலுக்கு முன், மாநிலத்தில்
ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., பல முறை, 'ஆப்பரேஷன் தாமரை'க்கு முயன்று, தோல்வியை சந்தித்திருந்தது.

தற்போது, லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெரும் பாலான இடங்களை கைப்பற்றி இருப்பதால், மீண்டும் முயற்சி துவங்கியுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் தேர்தல் பிரசார கமிட்டி தலைவர், எச்.கே.பாட்டீல், தோல்விக்கு பொறுப்பேற்று, அந்த பதவியை ராஜினாமா செய்தார்.


இதைத் தொடர்ந்து, முதல்வர் குமாரசாமி தலைமையில், நேற்று மதியம், அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தீவிர ஆலோசனைமேலும், ''பா.ஜ., ஆட்சி அமைக்க முயற்சிப்பதால், காங்கிரசை சேர்ந்தவர், முதல்வர் பதவி ஏற்கலாம்; இதற்கு, ம.ஜ.த., முழு ஆதரவு தரும்,'' என, குமாரசாமி கூறியுள்ளார்.இதை, மாநில காங்., தலைவர்கள் ஏற்றாலும், இது குறித்து ராகுலிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். அவர், குமாரசாமி யையே முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டதாகதகவல் வெளியாகியுள்ளது. தங்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் பேசி, இறுதி முடிவு எடுப்பதாக, குமாரசாமி கூறியுள்ளார்.


இதற்கிடையில், காங்., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க் களுடன், முன்னாள் அமைச்சர், ரமேஷ் ஜார்கிஹோளி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுஉள்ளார். அவருடன், 15 முதல், 20 எம்.எல்.ஏ.,க் கள் தொடர்பில் இருக்கலாம் என,தகவல் வெளியாகியுள்ளது.இதனால், முதல்வர் பதவியை, தலித் சமூகத்தை சேர்ந்த, பரமேஸ்வருக்கு விட்டுக் கொடுத்து, பா.ஜ., வின், ஆட்சியை கைப்பற்றும் திட்டத்திற்கு, முட்டுக்கட்டை போட, ம.ஜ.த., திட்டமிட்டு உள்ளது.

ஆனால், முதல்வர் நாற்காலி மீது கண் வைத்துள்ள, முன்னாள் முதல்வர், சித்தராமையா, இதற்கு ஒப்புக்கொள்வது சந்தேகம்.இத்திட்டத்தை, காங்., கட்சியின், அதிருப்தி, எம்.எல்.ஏ.,க் கள் ஏற்பதும் சந்தேகம் தான்.


இந்நிலையில், கர்நாடகா நிலவரம் குறித்து, டில்லியில் இன்று நடக்கவுள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், ராகுலுடன், சித்தராமையா ஆலோசிக்கவுள்ளார்.இதற்கிடையில், 'நரேந்திர மோடி, பிரதமராக பதவி ஏற்கும் வரை, ஆட்சியை கவிழ்க்க
முயற்சிக்க வேண்டாம்' என, மாநில, பா.ஜ., தலைவர், எடியூரப்பாவுக்கு, அமித் ஷா உத்தரவிட்டு உள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)