அடுத்த இலக்கு ராஜ்யசபா

புதுடில்லி: 1971ம் ஆண்டு இந்திராவிற்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சியாக பா.ஜ., உள்ளது. 2014 தேர்தலில் மோடி அலை காரணமாக 278 இடங்களை பா.ஜ., கைப்பற்றியது. இந்த முறை பா.ஜ., மட்டும் பெரும்பான்மைக்கு தேவையான 272 ஐ தாண்டி 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ., கூட்டணி 543 இல் 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி நாட்டில் தேர்தலே நடக்காது என எதிர்க்கட்சிகள் எச்சரித்தன. இருந்தும் பா.ஜ., வரலாற்றில் இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
பா.ஜ.,வுக்கு லோக்சபாவில் அதிக அளவில் உறுப்பினர்கள் இருந்த போதிலும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு நினைத்த பல சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 245 எம்.பி.,க்களில் 241 பேர் சட்டசபை எம்எல்ஏ.,க்களால் தேர்வு செய்யப்பட்டவர்களாகவும், 4 பேர் நியமன எம்.பி.,க்களாகவும் உள்ளனர். தற்போது ராஜ்யசபாவில் பா.ஜ.,விற்கு 102 உறுப்பினர்கள் உள்ளனர். தனி பெரும்பான்மை பெற பா.ஜ.,வுக்கு இன்னும் 20 உறுப்பினர்கள் தேவை.
அடுத்த 4 ஆண்டுகளில் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், உஉபி., பஞ்சாப் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநில தேர்தல்களில் பா.ஜ., பெறும் வெற்றியை பொறுத்தே ராஜ்யசபாவில் அக்கட்சியின் பலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே அசாம் மற்றும் உ.பி.,யில் பா.ஜ., அரசு நடக்கிறது. தமிழகத்தில் ஆளும் அதிமுக., உடன் பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது.
அதே சமயம் 2021 ல் மேற்குவங்கத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றினால் ராஜ்யசபாவில் பா.ஜ.,விற்கு கூடுதலாக 6 இடங்கள் கிடைக்கும். அத்துடன் ஜூன் மாதம் துவங்கி அடுத்தடுத்து அசாம், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதனால் இதில் சிலவும் பா.ஜ.,வுக்கு வைக்க அக்கட்சி தீவிரம் காட்ட திட்டமிட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)