2019 தேர்தல்: 10 அம்சங்கள்

2 புதுடில்லி : 2014 லோக்சபா தேர்தலில் பெற்ற 282 இடங்களை விட அதிகம் பெற்று, தனிப் பெரும் கட்சியாக பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி அல்லாமல் பா.ஜ., மட்டும் 300 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.,விற்கு முக்கியமான குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை தக்க வைத்துக் கொண்டதுடன், பெரும் சவாலாக இருந்த மேற்குவங்கம், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்கள், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றுள்ளது.

மீண்டும் பா.ஜ., 10 அம்சங்கள் :
1. லோக்சபா தேர்தல் நடத்தப்பட்ட 542 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ., மட்டும் 303 இடங்களை கைப்பற்றி உள்ளது. 2014 ல் தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும், பா.ஜ., மட்டும் 282 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் தனியாக ஒரு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.
2. இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி. இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. இந்த பிரம்மாண்ட வெற்றி பிரதமர் மோடியின் வளர்ச்சி மற்றும் அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. கோடிக்கணக்கான பா.ஜ., தொண்டர்கள் சார்பில் மோடிக்கு எனது வாழ்த்துக்கள் என பா.ஜ., தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
3. காங்., தலைவர் ராகுல் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். நாட்டு நலனில் அக்கறை காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன். காங்., தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். காங்.,பெற்றுள்ள படுதோல்வி காரணமாக கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும்படி ராகுலை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
4. குஜராத், டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒட்டுமொத்த லோக்சபா தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றி உள்ளது. பீகாரில் 40 ல் 38 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 48 ல் 41 தொகுதிகளிலும் பா.ஜ., வென்றுள்ளது. ம.பி.,யில் 29 ல் 28 இடங்களிலும், சத்தீஸ்கரில் 11 இடங்களில் 9 ஐ பா.ஜ., கைப்பற்றி உள்ளது.
5. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 25ல் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. அங்கு காங்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஏற்கனவே பல அரசியல் குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது, ஆளும் கூட்டணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
6. ஆந்திராவில் ஆளும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சியை படுதோல்வி அடைய வைத்து ஒய்எஸ்ஆர் காங்., கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. சட்டசபை தேர்தலில் 175 இடங்களில் 144 இடங்களையும் , லோக்சபா தேர்தல் அனைத்து 25 தொகுதிகளையும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்., கைப்பற்றி உள்ளது.
7. பஞ்சாப்பில் 13 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்., தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் திமுக.,வுடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்தித்த காங்., போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் 20 இடங்களில் 19 இடங்களில் காங்., வெற்றி பெற்றள்ளது.
8. இம்முறை உ.பி.,யில் இருந்து லோக்சபாவிற்கு அதிக எம்.பி.,க்களை பா.ஜ., பெற்றுள்ளது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பா.ஜ., மட்டும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., வீழ்த்த பிரம்மாண்ட கூட்டணி அமைத்த மாயாவதி - அகிலேசுக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்தது. மத்தியில் ஆட்சி செய்த எந்த கட்சியும் அல்லது கூட்டணியும் பெற்றாத அளவிற்கு உ.பி.,யில் அதிக இடங்களை பா.ஜ., கைப்பற்றி உள்ளது.
9. மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்த முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்., பா.ஜ.,விற்கு கடும் போட்டி கொடுத்தது. இருந்தும் திரிணாமுல் காங்., 22 இடுங்களை மட்டுமே கைப்பற்றியது. பா.ஜ., 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஒடிசாவிலும் பா.ஜ., 9 இடங்களை கைப்பற்றி உள்ளது.
10. தமிழகத்தில் திமுக - காங்., கூட்டணி, ஆளும் அதிமுக - பா.ஜ., கூட்டணியை படுதோல்வி அடைய செய்துள்ளது. 18 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் நுலிழையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு தப்பி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)