தினகரன், கமல், சீமான் கட்சிகள் 'டிபாசிட்' இழப்பு

சென்னை, தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அ.ம.மு.க. - மக்கள் நீதி மையம் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 'டிபாசிட்'டை பறிகொடுத்துள்ளனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதியில் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளை பெற்றால் அவர்கள் செலுத்திய 'டிபாசிட்' தொகை திரும்ப வழங்கப்படும். இல்லையெனில் 'டிபாசிட்' வழங்கப்படாது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. லோக்சபா தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.இந்த தேர்தலில் புதிதாக களம் இறங்கிய அ.ம.மு.க. - மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் 'டிபாசிட்' இழந்தனர்.சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் '20 ரூபாய் டோக்கன்' யுக்தியால் வெற்றி பெற்றார். அதேபோல் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தங்களை வெற்றி பெற வைப்பார் என அவரது கட்சி வேட்பாளர்கள் நம்பினர்.ஆனால் 'ஆர்.கே.நகர் பார்முலா' எடுபடவில்லை. சில தொகுதிகளில் ஒரு லட்சம் ஓட்டுகள் வரை அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். சில தொகுதிகளில் 50 ஆயிரம் ஓட்டுகள் வரை பெற்றுள்ளனர். ஆனால் 'டிபாசிட்' பெற முடியவில்லை. இதே நிலைமை தான் கமல் கட்சிக்கும் சீமான் கட்சிக்கும் ஏற்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)