'கை' கொடுத்தது வயநாடு! ராகுலை காப்பாற்றிய கேரளா

திருவனந்தபுரம், தேசிய அளவில் மோடி அலை, 'சுனாமி'யாக எதிர்க்கட்சிகளை கபளீகரம் செய்தும், கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதில், வயநாட்டில் போட்டியிட்ட ராகுலும், அதிக ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.காங்., கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல், உ.பி., மாநிலம் அமேதி, கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டதால் மீண்டும் வெற்றி பெறுவது கடினம் என உணர்ந்த ராகுல், வேறு தொகுதிகளை தேடத் துவங்கினார்.இதை வாய்ப்பாக கருதிய கேரள காங்., தலைவர்கள் அவரை வயநாட்டுக்கு அழைத்து வந்து போட்டியிட வைத்தனர். முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்கள் அதிகம் கொண்ட வயநாடு, காங்கிரசை பொறுத்தவரை பாதுகாப்பான தொகுதி. முஸ்லிம் லீக் ஆதிக்கம் கொண்ட இத்தொகுதியில் எதிர்பார்த்தது போலவே, ராகுல் அதிக ஓட்டுக்களுடன் அமோக வெற்றி பெற்றார். அமேதியில் அவர் தோல்வி முகம் கண்டுள்ளதால், அவரை லோக்சபாவுக்கு அனுப்பும் கதவை, வயநாடு திறந்துள்ளது. கடைசி நேரத்தில் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி அவருக்கு கை கொடுத்துள்ளது.கேரளாவில் மொத்தமுள்ள, 20 தொகுதிகளில் காங்., கூட்டணி, 19 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆலப்புழா தொகுதியை மட்டும் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் அலை முழுமையாக வீசிய ஒரே மாநிலம் கேரளா என்பதால், இங்கு போட்டியிட்ட ராகுலும் வெற்றிமுகம் கண்டுள்ளார். மேலும், ராகுல் கேரளாவில் போட்டியிட்டதும், இங்கு காங்கிரஸ் அலை வீச பிரதான காரணமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)