யூனியன் பிரதேசங்களில் யாருக்கு வெற்றி?

புதுடில்லி, யூனியன் பிரதேசங்களில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பரவலாக வெற்றி பெற்று உள்ளன.யூனியன் பிரதேசங்களில் ஒன்றான, லட்சத்தீவில், தேசியவாத காங்., கட்சியின், முகமது பைசல் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலிலும், இவர் தான், இங்கு வெற்றி பெற்றார்.டாமன் டையூவில், பா.ஜ.,வின், லாலு பாய் பாகுபாய் படேல், வெற்றி பெற்றுள்ளார். இவரும், இந்த தொகுதியின், 'சிட்டிங்' எம்.பி., என்பது குறிப்பிடத் தக்கது.அந்தமான் நிகோபர் தொகுதியில், காங்கிரசின், குல்தீப் ராய் சர்மா வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியை, பா.ஜ.,விடமிருந்து, காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.சண்டிகரில், பா.ஜ.,வின், கிரண் கெர் வெற்றி பெற்றார். காங்கிரசின், பவன் குமார் பன்சால், தோல்வி அடைந்தார்.தாத்ரா மற்றும் நாகர் ஹவெலி தொகுதியில், சுயேச்சை வேட்பாளர், டெல்கர் மோகன் பாய், முன்னிலையில் உள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)