பீஹாரில் சூறையாடிய பா.ஜ., கூட்டணி

பாட்னா, 'மகாகட்பந்தன்' எனப்படும், மெகா கூட்டணி என்பது, உத்தர பிரதேசம் மற்றும் பீஹாரில் மட்டுமே அமைந்தது. உத்தர பிரதேசத்தில், மாயாவதியின், பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைந்தன.அதே நேரத்தில், பீஹாரில், உண்மையிலேயே, மிகப் பெரிய மெகா கூட்டணி அமைந்தது. லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைந்தன.கடந்த தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இருந்த, உபேந்திர குஷ்வாகாவின், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி; முன்னாள் முதல்வர், அஜித் ஜோகியின், ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா போன்ற கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைந்தன.பீஹாரில் ஆட்சியில் உள்ள, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அமைத்தன. கூட்டணி கட்சியான, மத்திய அமைச்சர், ராம்விலாஸ் பாஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி, ஆறு தொகுதிகளில் போட்டியிட்டன.காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் இணைந்துள்ளதால், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.யாரும் எதிர்பார்க்காத வகையில், மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள், 39ல் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. காங்., ஒரு தொகுதியில் மட்டும் வென்றுள்ளது.பா.ஜ., தான் போட்டியிட்ட, 17லும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளம், 16 தொகுதியிலும், லோக்ஜனசக்தி, ஆறிலும் வென்றுள்ளன.பா.ஜ.,வில் இருந்து, காங்கிரஸ் சென்ற, முன்னாள், எம்.பி.,யான, பிரபல பாலிவுட் நடிகர், சத்ருகன் சின்ஹா, பாட்னாசாஹிப் தொகுதியில் தோல்வி அடைந்தார். மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் இங்கு வென்றார்.பேகுசராய் தொகுதியில், பா.ஜ.,வின் மத்திய அமைச்சர், கிரிராஜ் சிங் வென்றார். கம்யூனிஸ்ட் சார்பில் இங்கு போட்டியிட்ட, ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்ஹையா குமார், தோல்வி அடைந்தார்.மொத்த தொகுதிகள் - 402014 தேர்தல் முடிவுகள்பா.ஜ., - 22லோக் ஜனசக்தி கட்சி - 6ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 4ஐக்கிய ஜனதா தளம் - 2ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி - 3காங்., - 2தேசியவாத காங்., - 1=----2019 தேர்தல் முடிவுகள்கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்பா.ஜ., 13 4 17காங்., 1 0 1ஐக்கிய ஜனதா தளம் 9 7 16லோக் ஜனசக்தி 6 0 6



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)