குஜராத்தில் மீண்டும் பா.ஜ.,

ஆமதாபாத்,பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான, குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளிலும், கடந்த தேர்தலைப் போலவே, மீண்டும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.குஜராத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாக, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. குறிப்பாக, 2001ல் நரேந்திர மோடி, மாநில முதல்வரானப் பிறகு, பா.ஜ.,வின் இரும்புக் கோட்டையானது குஜராத். இங்கு, மோடி மற்றும் அமித் ஷா இணைந்து செயல்பட்டு, கட்சியின் வெற்றியை தொடர்ந்து தக்க வைத்து வந்தனர்.கடந்த, 2014 லோக்சபா தேர்தலின்போது, மாநிலத்தில் உள்ள, 26 தொகுதிகளையும், பா.ஜ., அள்ளி சுருட்டியது. அதன்பிறகு, கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வென்றாலும், முந்தைய தேர்தலில், 115ல் வென்றிருந்த நிலையில், அந்தத் தேர்தலில், 99ல் மட்டுமே வெற்றி பெற்றது.இந்நிலையில், இந்த லோக்சபா தேர்தலில், மீண்டும் அனைத்துத் தொகுதிகளையும் பா.ஜ., சுருட்டியுள்ளது. காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ள அமித் ஷா, 2.5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.குஜராத் என்பது, மோடி மற்றும் அமித் ஷாவின் சொந்த மாநிலம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், நரேந்திர மோடி முதல் முறையாக, இம்மாநிலத்தில் இருந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். தற்போது, அமித் ஷா, முதல் முறையாக,குஜராத்தில் இருந்து வெற்றி பெற்று, லோக்சபா செல்கிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)