2024 வரை நான் தான் பிரதமர்! சொல்லி அடித்த மோடி

புதுடில்லி: 'நான் தான் 2024 வரை பிரதமர்' என மாணவர்களிடம் சொல்லியபடியே இந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிறார் மோடி.

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக 2014ல் மோடி முன்னிறுத்தப்பட்டார். நாடு முழுவதும் வீசிய அலையால் அவர் அமோக வெற்றி பெற்று பிரதமரானார். அதே ஆண்டில் செப்டம்பரில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவரது பேச்சு நாடு முழுவதும் 18 லட்சம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒளிபரப்பானது.

அப்போது மோடியிடம் ஒரு மாணவர் 'நீங்கள் பிரதமர் ஆனது எப்படி' என கேள்வி எழுப்பினார். சிரித்துக்கொண்டே 'அதற்கு 2024 வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். உங்கள் பதவி ஏற்பு விழாவிற்கு என்னையும் அழையுங்கள்' என மாணவர்களிடம் மோடி கலகலப்பாக பேசினார்.

அன்று மாணவர்களிடம் கூறியது போலவே இரண்டாவது முறையாக மோடி வெற்றி பெற்று தன் ஆட்சியை 2024 வரை உறுதி செய்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)