தனி பெரும்பான்மை பெற்ற 3வது பிரதமர் மோடி

புதுடில்லி : நேரு, இந்திராவிற்கு பிறகு லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வரும் 3வது பிரதமர் மோடி.
நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. 2014 லோக்சபா தேர்தலில் பெற்ற 282 இடங்களை விட இது அதிகம். 1951-52 ல் நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தலில் நேரு 4 ல் 3 பங்கு ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முழு பெரும்பான்மை பெற்று நேரு வெற்றி பெற்றார். நாடு முழுவதிலும் பல்வேறு மொழி பிரச்னைகள் இருந்த போதிலும் காங்., தனிப்பெரும்பான்மை பெற்றது.
சுதந்திரம் பெற்ற 20 ஆண்டுகளுக்கு பிறகு 1967 ல் நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகள் இந்திரா 520 ல் 283 இடங்கள் பெற்று வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலில் இந்திரா பெற்ற முதல் வெற்றி இது. 1971 ல் நடந்த தேர்தலிலும் காங்., மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததால் 2010-2014 ம் ஆண்டுகளில் காங்., ஆட்சி பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. 2014ல் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 282 இடங்களில் பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் நிலையான ஆட்சி தர முடிந்தது. தற்போது பா.ஜ., மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)