கேரள மா.கம்யூ., படுதோல்வி; 'சபரிமலை' காரணம்

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள 20 எம்.பி., சீட்டுகளில் 19 ஐ ஆளும் இடதுமுன்னணி இழந்துள்ளது. இதற்கு, சபரிமலை பிரச்னையில் அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியே காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

கடந்தாண்டு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முன் வைத்து, அதை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில், கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வந்தால் பாதுகாப்பளிப்போம் என்றது. இது, சபரிமலை ஐயப்பன் கோவிலின் ஆகம விதிகளுக்கு முரணானது என்று இந்து பக்தர்கள் பலரும் கண்டித்தனர். சபரிமலையில் பக்தர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால், சில போலி பெண் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தது பினராயி விஜயன் அரசு. இது பெரும்பான்மையான இந்து மக்களை புண்படுத்துவதாக அமைந்தது. சபரிமலை பிரச்னையில் கேரள அரசை கண்டித்து காங்., கட்சியும், பா.ஜ., வும் போராடின. எனினும் கேரளாவில் பா.ஜ., அரசியல் செல்வாக்குள்ள அமைப்பாக இல்லை என்பதால், அந்த கோபத்தை காங்கிரஸ் கட்சியே அறுவடை செய்துள்ளது என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.
கேரள பல்கலை கழகத்தின் அரசியல் ஆராய்ச்சி மாணவர் சஜத் கூறுகையில், '' சபரிமலை பிரச்னை உண்மையில் மக்களிடம் தாக்கம் செலுத்தியது. அது பா.ஜ.,வுக்கு ஆதரவாக இல்லாமல் காங்., கட்சிக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. இதனை நாங்கள் தேர்தலுக்கு முந்தைய ஆய்விலேயே கண்டறிந்தோம்,'' என்கிறார்.

கடந்த 1977 தேர்தலுக்கு பின்னர், கேரள இடது முன்னணி, பதவியில் உள்ளபோதே இவ்வளவு மோசமாக தோற்பது இதுவே முதல்முறை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)