பிரதமர் மோடிக்கு அத்வானி வாழ்த்து

புதுடில்லி: பாஜ., மூத்த தலைவர் அத்வானி வெளியிட்ட வாழ்த்து செய்தி: தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பா.ஜ.,வை வெற்றி அடைய வைத்ததற்காக மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பா.ஜ.,வின் செய்தி, கடைசி வாக்காளரையும் சென்றடைய, தலைவராக அமித்ஷாவும், கட்சி தொண்டர்களும் கடுமையான முயற்சி செய்தனர்.
பெரிய மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாட்டில் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது சிறப்பான உணர்வை தருகிறது. இதற்காக தேர்தல் ஆணையம், அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். சிறப்பான எதிர்காலத்துடன் முன்னேற நமது தேசத்தை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)