ஜெகன்மோகனின் ஆதரவு யாருக்கு?

ஐதராபாத்: ஆந்திர சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்., காங்., கட்சி 149 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளதால், ஏறக்குறைய தோல்வி நிலையில் உள்ளது. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரமாண்ட வெற்றியை அடுத்து மே 30ம் தேதி ஆந்திர முதல்வராக பதவியேற்கவும் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். லோக்சபா தேர்தலிலும் ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்., 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் மத்தியில் அவரது ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்துகணிப்புக்களை ஏற்க சுமார் 22 எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த நிலையிலும், ஜெகன் மோகன் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அரசியல் நிலவரத்தை மட்டும் உற்று கவனித்து வந்தார்.
தற்போது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் ஜெகனின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அவரது கட்சியின் ராஜமோகன் ரெட்டியிடம் கேட்ட போது, ஜெகன் மோகனின் நீண்டகால கோரிக்கையான ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை ஆதரிப்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எங்களின் முழு ஆதரவையும் தர தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். பிரசாரத்தின் போது கேட்டதற்கு ஜெகன் மோகனும் இதே கருத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)