வாரணாசியில் பிரதமர் மோடி அபார வெற்றி

புதுடில்லி: வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உ.பி.,யின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் ஷாலினி யாதவ், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2வது இடத்தை சமாஜ்வாதி இடத்தை பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சென்ற முறை இதே தொகுதியில் 3.70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)