மோடியை வாழ்த்த மனமில்லாத மம்தா

புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கியது முதல் பா.ஜ., அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார்.
கிட்டத்தட்ட மோடியின் வெற்றியும், அவர் தலைமையில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைய உள்ளதும் உறுதியாகி விட்டது. மோடிக்கு இலங்கை அதிபர், தமிழக முதல்வர், வெளிநாட்டு தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் திரிணாமுல் காங்., தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பதிவிட்டுள்ள டுவீட்டில் மோடியை நேரடியாக பாராட்ட மனமில்லாமல், பொதுப்படையாக ஒரு வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.
மம்தா வெளியிட்டுள்ள டுவீட்டில், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் தோற்றவர்கள் அல்ல. நாங்களும் ஒரு முழுமையான மதிப்பாய்வை செய்ய வேண்டும். பின்னர் எங்களின் கருத்துக்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம். ஓட்டு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடைந்த பிறகு ஓப்புகை சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். இவ்வாறு மம்தா குறிப்பிட்டுள்ளார்.

Mamata Banerjee ✔@MamataOfficial Congratulations to the winners. But all losers are not losers. We have to do a complete review and then we will share our views with you all. Let the counting process be completed fully and the VVPATs matched
6,6961:21 PM - May 23, 2019Twitter Ads info and privacy 4,069 people are talking about thisவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)