நடிகர்கள், வீரர்கள் நிலைமை என்ன?

புதுடில்லி: லோக்சபா தேர்தல் களத்தை சந்தித்த கிரிக்கெட் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலர் வெற்றியையும், சிலர் தோல்வியையும் சந்திக்க உள்ளனர்.

கிழக்கு டில்லி தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்கியள்ள கிரிக்கெட் வீரர் முன்னிலையில் உள்ளார்.
தெற்கு டில்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள குத்துச்சண்டை வீரர் விஜேந்திர் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மத்திய அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஜெய்ப்பூர் புறநகர் பகுதியில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியா பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத்தில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பின்னடைவை சந்தித்துள்ளார்.

நடிகர்கள்



பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பாஜ.,சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னிதியோல் முன்னிலையில் உள்ளார்.
மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூரில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள நடிகை மிமி சக்கரவர்த்தி முன்னிலையில் உள்ளார்.
பீஹார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய சத்ருஹன் சின்கா பின்னடைவை சந்தித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கிய நடிகை சுமலதா முன்னிலையில் உள்ளார்.
உ.பி.,யின் மதுரா தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்கிய நடிகை ஹேமமாலினி பின்னடைவை சந்தித்துள்ளார்.
ராம்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்கியுள்ள நடிகை ஜெயப்பிரதா பின்னடைவை சந்தித்துள்ளார்உ.பி., மாநிலம் பதேபூர் சிக்ரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய நடிகர் ராஜ்பாபர் பின்னடைவை சந்தித்தார்.
சண்டிகரில் பாஜ., சார்பில் களமிறங்கிய நடிகர் கிரோன் கெர் முன்னிலையில் உள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)